தவளைத் தாக்குதலில் துணைப்படையினர் …
1993 ஆம் ஆண்டு , கார்த்திகைத் திங்கள் 1 ஆம் நாள். மணலாற்றுத் துணைப்படை முகாமிற்கு முல்லை மாவட்டத் துணைப்படையில் பெரும் பகுதியினர் அழைக்கபட்டிருன்தனர்.
2 ஆம் நாள் செவ்வாய்க் கிழமை மாலை 6.30 மணிக்கு தளபதி முகாமிற்கு வருகை தந்திருந்தார். சில நிமிடக் கலந்துரையாடலின் பின்னர் அணிகள் தனித்தனி பிரிக்கப்பட்டன. சண்டை ஒன்றுக்குச் செல்லப்பொகின்றோமென்பது அனைவருக்கும் தெரிந்திருந்தது. ஆனால் எங்கே , எப்போது என்பது மட்டும் எவருக்கும் தெரியாது.
” எங்களுக்குள் என்ன பிரசினைகள் ஏற்ப்பட்டாலும் அவற்றை இங்கு வந்து கதைத்துக் கொள்வோம் ; அதுவரை பொறுமையாக இருந்து , தரப்படும் பணிகளைச் செய்து , முல்லை மாவட்டத்தின் பெருமையை , துணைப்படையின் பெயரினைக் காப்பார்ரிப்போடுங்கோ ” என்ற வார்த்தைகளை மட்டும் எமது மாவட்டத்தின் தளபதி , மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறிக்கொண்டார்.
மழைத்துளிகள் விழ ஆரம்பித்தன. வீட்டு நினைவிலிருந்து அனைவரும் விடுபட விரும்பினோம். சமையல் கொட்டிலில் இருந்த குடமொன்று எமது அணியினர் இருந்த பகுதிக்கு வந்து சேர்ந்தது. அதுதான் மிருதங்க இசைக்கருவி. பாடத் தொடங்கினார்கள். பாடத் தெரியாது என்று எவரும் இருக்கவில்லை. அனைவருமே பாடகராய் மாறினர். புரட்சிப் பாடல்கள் , தத்துவப் பாடல்கள் , பக்திப் பாடல்கள் எல்லாம் மாறி மாறி வந்தன. இனம்புரியாத இன்பமும் – துன்பமும் கலந்த இரவாக அது நகர்ந்துகொண்டிருந்தது. பசியும் இல்லை ; தூக்கமும் இல்லை , இரவு 11.30 மணியிருக்கும் , வெளியே சென்றிருந்த தளபதி மீண்டும் வந்திருந்தார். தூறலாகத் தொடங்கிய மழை வேகமாகக் கொட்டியதை , தளபதி நன்றாக நனைந்து வந்ததிலிருந்து அறிந்து கொண்டோம்.
” எல்லோரும் சாப்பிட்டுவிட்டீர்களா ? ”
என்று தளபதி கேட்ச கேள்விக்கு , ” ஆம் ” என்று எல்லோரும் ஏககாலத்தில் பதில் கொடுத்தார்கள் ஆனால் பலர் சாப்பிடவில்லை என்பது எனக்குத் தெரியும். சண்டைஎன்று புறப்பட்டுவிட்டால் சாவு வருவது தவிர்க்கமுடியாததென்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் வீணாக நாங்கள் மரணிப்பதற்கு எமது வீரர்கள் சர்ந்தப்பம் கொடுக்கமாட்டார்களேன்பது தெளிவாகத் தெரியும். இருந்தாலும் சாப்பிடுவதில் எவருக்கும் புலன் செல்லவில்லை. ஒழுக்கவிதிகள் பற்றி சில நிமிடங்கள் கலந்துரையாடிய பின்னர் , ” எல்லோரும் ஓடிச்சென்று வாகனங்களில் இருங்கோ ” என்ற பணிப்பு விடுக்கபட்டது. ஓடிச்சென்று ஏறினோம். ஒன்றன்பின் ஒன்றாக அனைத்து வாகனங்களும் புறப்படத் தொடங்க்கின. இருளைக் கிழித்துக்கொண்டு பயணம் தொடர்ந்தது. எமது மாவட்டத்தை விட்டு வெளியே செல்கின்றோமேன்ர உண்மையை , சற்று நேரத்தின் பின் அனைவரும் தெரிந்துகொண்டனர்.
மனித நடமாட்டமற்ற காட்டுவழியில் வாகனங்கள் ஓடிக்கொண்டிருந்தன. எல்லோரும் ஒருவரை ஒருவர் கேள்விக்குறியுடன் நோக்கியவண்ணம் இருந்தனர். பலருக்கு ஏற்கனவே அந்தப் பாதை தெரிந்திருந்ததால் எங்கே செல்கின்றோமேன்பதைத் தெரிந்துகொண்டனர் ; இருப்பினும் மெளனமாக இருந்தனர். அன்றிரவு அமைதியாகவே விடிந்தது.
மறுநாட் காலை 9.00 மணியளவில் அனைவரும் ஒன்றுகூடினோம். மன்னார் மாவட்டத் தளபதி எம்முடன் கலந்துரையாடினார். ” நீங்கள் என்ன பணிக்காக வரவழைக்கபட்டுள்ளீர்களென்பது எனக்குத் தெரியும். உங்களுடைய பணிக்குரிய நாள் வரும்வரை எங்களுக்கு இன்னுமொரு பனி செய்து தரவேண்டும். அதுவும் ஒரு பொறுப்புமிக்க பணிதான். சமையற் பணிதான் அந்தப்பணி. இது உங்களுக்குப் புதிய இடம். கண்டபடி வெளியே செல்லாதீர்கள். எங்களுடைய வெற்றிக்கு உங்களின் பூரண ஒத்துழைப்பு வழங்குவீர்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு , இன்று மாலையிலேயே சமையல் பணியைத் தொடங்கலாம் ” என்று அவர் சொல்லிக்கொண்டார்.
பூநகரி இராணுவ முகாம் தாக்குதலுக்கு உதவிப்பணிக்காக நாம் வந்துள்ளோமென்ற உண்மை , அனைவருக்கும் தெளிவாயிற்று. எமது மாவட்டத்தை விட்டு ஏன் இங்கு எங்களை அழைத்துவந்தார்கள் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் ஒருமுறை தோன்றினாலும் , அடுத்தகணம் அது மறைந்து போயிற்று. மணலாற்றுத் துணைப்படை ( முல்லை மாவட்டம் ) மன்னார் சண்டையில் பங்கெடுத்தார்களென்ற பெருமை மட்டுமல்ல , தமிழீழ மக்களை இது விழிப்படையவும் செய்யும் என நினைத்துககொண்டோம். இதனை விட எங்களை வளர்த்த பெருமை சேர்த்த அன்பண்ணனின் பிறந்த மண்ணை விடுவிக்கும் சண்டைக்கு வந்துள்ளோம் என்ற மகிழ்வு , புதிய உற்சாகத்தினைக் கொடுத்தது. எங்கள் பனி அவருக்கு எவ்வளவு மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்று நினைத்தபோது , அனைத்துத் துயர்களும் பறந்துபோயிற்று.
சண்டை உடனே தொடங்கும். ஓரிரு நாட்களில் வீடு திரும்பலாம் என நினைத்தோம். சமையல் அடுக்குகளைப் பார்த்தபோது , நாலைந்து நாட்களுக்கு நீடிக்கும் என்பது தெரிந்தது. ஒவ்வொரு நாள் இருவும் புதிய அணிகள் வந்து கொண்டிருந்தன. அதற்கேற்ப சமையல் அளவும் அதிகரித்தது. 8 ஆம் திகதி காலையிலிருந்து சமையலைத் திட்டமிட்டு நடாத்த வேண்டியிருந்ததால் , நான்கு அணிகளாகப் பிரிந்து சமைக்கத் தொடங்கினோம். தொடர்ட்சியான சமையல் சற்றுக் களைப்படைய வைத்திருந்தது. ஆனால் எமது போராளிகள் இரண்டு – மூன்று மாதங்கள் , இரவு – பகல் பாராது எடுத்த கடுமையான பயிற்சியை நினைத்தபோதெல்லாம் களைப்பு தெரியாது போயிற்று. ஒரு வாரத்துக்கு மேலாகிவட்டதாலும் , புதிய – பழகிய போராளிகள் பலர்வந்து உரையாடத் தொடங்கியதாலும் விட்டு நினைவுகள் மறந்துபோயின.
1993.11.09 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை காலையில் , மூத்த தளபதி சொர்ணமும் எமது மாவட்டத்தின் தளபதியும் வந்தனர். சலிக்காத எங்களின் பனி அவர்களை மகிழ்வடையச் செய்தது உற்சாகம் தரும்வகையில் எம்முடன் கலந்துரையாடிவிட்டு , நாளைக்காலியில் மீண்டும் சந்திப்பதாகக் சொல்லிவிட்டுச் சென்றிருந்தனர். சண்டை நாளை தொடங்கும் என்பதை அனைவரும் எதிர்பார்த்தோம். ஏனெனில் அதற்க்கான இறுதி நடவடிக்கைகள நடைபெற்றுக்கொண்டிருந்தன. தொடர்ச்சியாக நெருப்பு வெக்கையில் நின்றதாலும் , குளிப்பதற்கு நல்ல தண்ணீர் இல்லாமையினாலும் எம்மில் பலருக்கு காய்ச்சல் கண்டிருந்தது. அருகே இருந்த மந்துக் காட்டில் மழைக்குத் தேங்கிய தண்ணீரை குலமென்று சொல்லி , பலர் குளிக்கச் சென்றார்கள். அதைக் குளம் என்று சொல்வதைத் தவிர வேறு வழியிலை , அதன் பக்கத்தில் நாலைந்து நாவல் மரங்கள் நன்கு பழுத்து நின்றன. நாவலும் எம் வீரர்களும் பட்டதேபாடு. இரண்டு நாட்களில் மரத்தை வெட்டை கண்டார்கள்.
1993.11.10 ஆம் நாள் புதன்கிழமை காலையிலிருந்து , சமையல் பணியிலிருந்து எமக்கு ஒய்வு தரப்பட்டது. நோயாளிகள் தவிர்த்து அணிகள் சீர் செய்யப்பட்டன. 9 ஆம் திகதி இரவு வவுனியா , கிளிநோட்சி மாவட்டங்களிலிருந்து துணைப்படை அணிகள் பல வந்தன. காலை உணவுக்குப் பின் சொர்ணமண்ணனும் எமது மாவட்டத் தளபதியும் வந்திருந்தனர். அனைவரும் அணிவகுத்து ஓரிடப்பட்டோம் ; சொர்ணமண்ணன் எங்களுடன் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டார்.
” இன்று இரவு நாம் பூநகரி இராணுவத் தளத்தை தாக்கி அழிக்கப் போகின்றோம். இத்தாக்குதலில் வெற்றி எங்களுக்குத்தான் என்பதில் சந்தேகமில்லை. இந்தப் படைமுகாமில் ஒரு கேணல் உட்பட இரண்டாயிரம் இராணுவத்தினர் வரை இருக்கின்றனர். ஒரு நாள் அல்லது இரண்டுநாள் அல்லது மூன்று நாட்கள் கூட இந்தச் சண்டை நீடிக்கலாம் ; ஆனால் வெற்றி எங்களுக்குத்தான். நாம் அடித்து முன்னேரிக்கொண்டிருப்போம். காயமடைந்த வீரர்களையும் , இராணுவத்தின் படைகலங்களையும் உடனுக்குடன் நீங்கள் தான் எடுத்துச் செல்லவேண்டும். நீங்கள் சண்டைக்கு இறங்கத் தேவையில்லை. தேவையான வீரர்கள் அதற்காக இருக்கிறார்கள்.
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இராணுவ உபகரணங்களையும் எமது காயமுற்ற வீரர்களையும் வேகமாக வெளியே எடுத்து வருவதுதான். நீண்ட துரம் இவற்றை எல்லாம நீங்கள் துக்கத் தேவையில்லை. உள்ளே நூற்றுக்கணக்கான உழவுஇயந்திரங்க்கள் வருவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. அவற்றையும் நீங்கள் தான் ஓட்டிச் செல்லப் போகின்றீர்கள். இந்த வெற்றி எமது விடுதலைப் போரினை புதிய பாதைக்கு இட்டுச் செல்லும். புலிகள் கழுத்து நெரிக்கப்பட்டு விட்டது ; அவர்கள் அழிக்கப்பட்டுவிட்டார்கள் என்று கருதும் சிங்கள அரசுக்கும் , இராணுவத்துக்கும் எமது பலம் எத்தனை வலிமையானது என்பதை செயல்மூலம் எடுத்துக்காட்டப் போகின்றோம். எமது இந்த தாக்குதல் வெற்றிக்கு , மண்கிண்டி இராணுவ முகாம் தகர்ப்புக்கு எவ்வாறு ஒத்துணையாகவிருந்து செயற்பட்டீர்களோ , அதுபோன்று செயற்படவேண்டும் ; செய்வீர்களா ? ” என்று கேட்ட கேள்விக்கு , ‘ ஆம் ‘ என்று அனைவரும் ஒருமித்துப் பதில் கூறினார். ” உங்களை நம்பி ஏணிப்படிகளில் நாங்கள் ஏறலாமா ? ஏணியை உறுதியாய்ப் பிடித்துக்கொள்வீர்களா ? ” என்றபோதெல்லாம் உற்சாகமாக , ” ஆம் ” என்ற குரல் ஓங்கி ஒலித்தது.
மாலை 4.45 மணியளவில் சத்தியப்பிரமாணத்துடன் படை நகர்வுகள் ஆரம்பமாகின. மாலை 6 மணிக்கெல்லாம் மழை கொட்டத்தொடங்கியது. என்றுமில்லாதவாறு அன்று வானம் இடிவிழுவது போன்று ஊற்றியது. நனைந்தபடியே முகாம் நோக்கி ஓடிக்கொண்டிருந்தோம். மழைக்காகக் காத்திருந்தால் இலக்கை தவறவிடவேண்டி ஏற்படும். எதிர் நீச்சல் போட்டே வெற்றிகண்டு பழகிப்போன போராளிகள் அல்லவா !
பாழடைந்த பிரதான வீதி எங்கும் வெள்ளம் தேங்கி நின்றது. கொட்டும் மழையிலும் இலக்கினை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் பெண்போராளிகளைப் பார்த்தபோது , எங்களுக்கெல்லாம் புதிய வேகம் பிறந்தது : எறிகணைகள் கனகர ஆயுதங்கள் என்பவற்றைச் சுமந்து கொண்டு எவ்வளவு வீராவேசத்துடன் ஓடிக்கொண்டிருந்தார்கள் !உலகில் எந்த ஒரு நாட்டிலும் இத்தனை பலம்வாய்ந்த பெண்கள் படையணி இருக்கமுடியாது.
இரவு 10.00 மணிக்கெல்லாம் இராணுவ முகாமை அண்மித்துள்ள இடங்களில் நின்றிருந்தோம். எம்மைத் தாண்டி எம் தியாகக் குழந்தைகள் முன்னேறினர். வயல்வெளிகள் எங்கும் வெள்ளம் தேங்கி நின்றது. மழை விட்டிருந்தது. இராணுவ முகாம்களைத் தாக்கும் எல்லைக்குள் செல்வதற்கு அன்றைய இயற்கையின் செயல் பெரிதும் சிரமத்தைக் கொடுத்தது. இருப்பினும் பல மாதங்கள் அவர்கலேடுத்த பயிற்சியின் முன்னே , அது தூசாகிவிட்டது. இராணுவமுகாமில் சுழன்றுகொண்டிருந்த தொலைதூர ஒளிப்பாய்சும் மின்குமிழ் தன்வேலையை செய்துகொண்டிருந்தது. இடையிடையே இராணுவத்தினர் தாம் விழிப்புடன் இருப்பதை துப்பாக்கி வேட்டுக்களால் காட்டினர். இது எங்களுக்குப் புதுமையாக இருந்தாலும் எமது வீரர்களுக்குப் பழகிப்போனதொன்று.
நாடு இரவு தாண்டிவிட்டது. தீடிரென துப்பாக்கிகள் பல வேகமாகா இயங்கத் தொடங்கின கடிகாரத்தைப் பார்க்கின்றேன். 1.35 ஐக் காட்டியது. அனைத்துத் திசைகளிலும் வெளிட்சக் குண்டுகளை படையினர் வீசினர். திரும்பும் திசைஎல்ங்கும் எறிகணைகளும் , துப்பாக்கிக் குண்டுகளும் வீரமுழக்கம் செய்தன. உடலிலுள்ள ரோமங்கள் குத்தி நின்றன. சில மணித்தியாலங்களில் எங்களின் பனி ஆரம்பமாகியது. காயமுற்ற எமது வீரர்களை , உயிர் கொடுத்த உத்தமர்களை சுமக்கத் தொடங்கினோம். எங்களின் வேகத்தை விட எமது வீரர்கள் பலநூறு மடங்கு வேகத்துடன் முன்னேறிக்கொண்டிருந்தனர். வேதனை ஒருபுறமும் மகிழ்வு ஒருபுறமுமாக ஓடிஓடிச் சுமந்தோம் எமது வாகனச் சாரதிகள் வேகமாகவும் , சாதுரியமாகவும் இயங்கிக்கொண்டிருந்தனர். சிங்கள தேசத்தின் வான்படை விமானக்கள் அனைத்தும் முழுவேகத்தில் செயற்ப்பட்டன. அவற்றின் தாக்குதலைக் கருத்தில் கொள்ளும் மனோநிலை எவரிடமும் இருக்கவில்லை.
தூக்கம் , துயர்களை மறந்து தாக்குதலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த எம் வீரர்களைப் பார்த்தபோது தலை சுற்றியது ; கண்ணீர் பொங்கியது. சிரித்து சிரித்தே எதிரியின் காப்பரணை நோக்கி ஓடினார்கள். வீர விளையாட்டோன்று , வெற்றியும் சோகமும் நிறைந்த வீரசாகாசம் ஒன்று நடந்துகொண்டிருந்தது. மக்களின் துயர்துடைக்க ரத்த வேள்வி ஒன்று நடந்ததுகொண்டிருந்தது. துப்பாக்கி குண்டுகளின் நடுவே புயலாய்ப் பாய்ந்துகொண்டிருந்த பெண்புலிகளைப் பார்க்கின்றேன். என்ன வீரம் , என்ன தியாகம் , இவர்களின் வீரத்துக்கு மலையை ஒப்பிடுவத , வானத்தை ஒப்பிடுவதா , கடலை ஒப்பிடுவதா …? விளங்காத விந்தையான வீரத்தைக் கண்டிருந்தேன். நான்கு திசைகளிலிருந்தும் வந்த வெற்றிச் செய்திகளை ” வோக்கி ரோக்கி ” கல் முழங்கிக்கொண்டிருந்தன. அன்று பகல் வந்ததும் , பின் இரவு வந்ததும் பிரமை போலிருந்தது.
நாகதேவன்துறை கடற்படைத் தளமும் ஏனைய மூன்று படைமுகாம்களும் அன்று முழுமையாக அழிக்கப்பட்டிருந்தன. எஞ்சியிருந்த ஒரு படைமுகாமைத் தாக்கி அழிப்பதற்கான புதிய சண்டைகள் , அன்று இரவே ஆரம்பமாகின. அன்றைய இரவுதான் எம்மையெல்லாம் வளர்த்தெடுத்த அன்பண்ணனின் வீரம் அவர் பிறந்த மண்ணில் விதியாகின்றது. நாடு இரவு தாண்டி விடிகின்ற காலையில் அவர் முடிவு எம்மை எட்டுகின்றது. பசிமறந்த களைமறந்த தூக்கம் மறந்து அழுதோம் ; அழுதால் தான் மனம் ஆறும். துணைப்படையை உருவாக்கி , எல்லையில் எம்மைத் துணிவோடு நிறுத்தி வேண்டியபோதெல்லாம் விரும்பிய துப்பாக்கிகளைத் தந்து , திசைமாறி நின்றவர்க்கு நேர்வழிகாட்டி , பூநகரி வரை வரும் துணிவைத் தந்து வளர்த்த ” அன்பு ” அண்ணன் , பிறந்த மண்ணில் மரணிக்கும் பாக்கியம் பெற்றுவிட்டார். கண்முன் மறையாது நிற்கும் அந்தக் கள நினைவுகளில் , கடல்நின்று களம் வென்ற கடற்புலிகளின் வீரத்தை எழுதுவதா …? எதிரியின் உடல்மீது ஏறி நின்று ‘ புறம் ‘ பாடிய பெண்புலிகளைப் பற்றி எழுதுவதா …. ? வான்படை வட்டமிட வைத்த அடிநகராமல் சிங்களத்தை சிதறடித்த வீரப்புதல்வர்களின் விந்தைகள் எழுதுவதா …. ? எதிரியின் டாங்கியை எடுத்து ஓடி வந்த எங்கள் மறக்குலத்தின் வேகத்தை எழுதுவதா ….. ? நாமென்ன எழுதுவது ; உலகவரலாறே தன் சாதனைப் புத்தகத்தில் எழுதிவிட்டது !
வெற்றிமேல் வெற்றியை , துயரத்தின் சுமைகளை , இழக்கக்கூடாத எங்கள் ‘ அன்பைச் ‘ சுமந்தவர்களாய் நீங்காத நினைவுகளோடு – 14 ஆம் திகதி அதிகாலை மணலாறு நோக்கி எம் பயணம் தொடர்ந்தது.
” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “
– மணலாறு விஜயன்
– விடுதலைப்புலிகள் ( மாசி – 1994 ) இதழிலிருந்து தேசக்காற்று முதல் இணைய தட்டச்சு முலம்.
இதயபூமி-1 இராணுவ நடவடிக்கையின் வெற்றிக்கு உயிர்தந்த பதின்மர் – 3