*அமையப்போகும் தமிழீழத்தில் முஸ்லிம்களுக்கும்
ஓர் இடம் இருக்கும் – தந்தை செல்வா
*தமிழ் முஸ்லிம்களும் தமிழீழ அரசின் குடிமக்களே –
தேசியத்தலைவர்
1990 இல் திருகோணமலை – உப்புவெளிப் பிரதேசத்தில் தங்கியிருந்த தமிழ் முஸ்லிம்களை அடித்துவிரட்டிவிட்டு, அந்த இடத்தை ´´பன்சலவத்த´´ எனப் பெயர்மாற்றி, சிங்களக் குடியேறிகளை நிலத்தை வழங்கியசிங்கள அரசு, அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கான எவ்வித அடிப்படை வசதிகளையும்செய்துகொடுக்கவில்லை.
அவர்கள் திருகோணமலை நகர்ப்புறத்தில் குடிசைகளை அமைத்து வாழ்ந்தவேளையில் ஏற்பட்டகடும்வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உதவியற்று நின்றபோது; தமிழீழ அரசினால் நிர்வகிக்கப்பட்டு வந்த ´´தமிழர்புனர்வாழ்வுக் கழகம்´´ 20.12.2002 அன்று, அவர்களுக்கான உணவுப்பொருட்கள் மற்றும் அத்தியாவசியபொருட்களை வழங்கியது. 59 குடும்பங்கள் இந்த உதவியைப்பெற்றன.
இவ்வாறு எத்தனையோ உதவிகளை முஸ்லிம்மக்களுக்காகச் செய்தபோதும், அவர்கள் தம்மை ஒருபோதும்தமிழர் என்று சொன்னதேயில்லை. “முஸ்லிம்” என்றொரு புதிய இனமாகத் தம்மைப்பிரகடனப்படுத்திக்கொண்டார்கள்.