
4500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான மொழி தமிழே! தமிழர் அல்லாத செருமானிய மானுடவியல், வரலாற்று ஆய்வு நிறுவனமும், தமிழர் நீக்கிய டேராடூன் வன உயிரி ஆய்வு நிறுவனமும் இணைந்து வெளியிட்ட ஆய்வு முடிவு : “தமிழிய மொழிக் குடும்பத்தின் (கன்னடம், மலையாளம், தெலுங்கு, கொங்கணி, கோண்டா, கோண்டி) முதன் மொழி தமிழேயாம்!” அவ்வாறே என உலகம் கூறுகிறது. நாம் வாய் மூடி அமைதி காத்தாலும் உண்மை அதுவேயாம். வழக்கொழிந்த சமற்கிருதம் எனவும் அவர்களே உரைக்க, தமிழரல்லாத உலக மொழி இயல் ஆய்வறிஞர்களும் அவ்வாறே பல ஆண்டுகளாக உறுதிப்படுத்திவருகிறார்கள். .
தமிழர்கள் தம் மொழி அழியாமல் காத்தால் மட்டும் போதும்!