1954ஆம் ஆண்டு அமரர் தர்மரட்ணம் என்பவரின் தென்னந்தோட்டத்தில் அமைக்கப்பட்ட குடியேற்றக் கிராமம் திராய்க்கேணியாகும். திராய்க்கேணிக்கு கிழக்குப் பக்கத்தில் ஒலுவில் கிராமமும் தெற்குப் பக்கத்தில் பாலமுனையும் அமைந்துள்ளது. இக்கிராமம் அட்டாளைச்சேனை உதவிஅரசாங்க அதிபர் பிரிவின் கீழும் அக்கரைப்பற்று நீதிமன்று நியாதிக்கத்தின் கீழும் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் முன்நூற்றெழுபதிற்கும் மேற்பட்ட குடும்பங்கள் முன்நூற்றைம்பது வீடுகளில் வாழ்ந்து வந்தார்கள். இவர்களின் பிரதான தொழில் விவசாயமாகும்.
1990.08.05 இல் திராய்க்கேணியில் வசித்து வந்த முசுலிம்களில் ஒருவர் காட்டுக்குச் சென்றவேளை மர்மமான முறையில் உயிரிழந்த்தைத் தொடர்ந்து 1990.08.06 அன்று அக்கிராமத்திலிருந்த நூறு – நூற்றைம்பது பேர் கொண்ட முசுலிம் குழு திராய்க் கேணியிலிருநத் தமிழர்களைத் தாக்கினார்கள்.
தாக்கக் கத்தி, வாள், பொல்லு போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தியதுடன், வீடுகளையும் அவர்களின் உடைமைகளையும் தீயிட்டு எரித்தார்கள். முசுலிம்களின் தாக்குதல் தீவிரமடைய கிராமமக்கள் அருகிலிருந்த பிள்ளையார் கோயிலில் அடைக்கலம் புகுந்தார்கள். கோயிலுக்குள் நுழைந்த முசுலிம் குழுக்கள் அடைக்கலம் புகுந்த மக்களை வாள்களால் வெட்டியும் கத்தியாற் குத்தியும் தாக்கினார்கள். இவர்களின் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் கொல்லப்பட்டனர்.
இவ்வாறு முசுலிம்கள் தாக்குதல் நடாத்திக்கொண்டுருக்கும் போது கோயிலுக்கு வெளியில் சிறிலங்கா இராணுவத்தினர் பவள் கவச வாகனத்தில் தாக்குதல் நடத்துபவர்களுக்குப் பாதுகாப்பினை வழங்கிக்கொண்டிருந்தார்கள். எஞ்சியிருந்த நூற்றிஐம்பது குடும்பத்தினர் அகதி முகாமுக்குச் சென்றனர்.
தாக்குதலில் தொண்ணூறிற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தார்கள். நாற்பதிற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தார்கள். முன்நூற்றுநாற்பதிற்கும் மேற்பட்ட வீடுகளும், எழுபது மில்லியன் ரூபாவிற்கு மேற்பட்ட பெறுமதியான சொத்துக்களும் எரிக்கப்பட்டன.
06.08.1990 அன்று திராய்க்கேணிப் படுகொலையில் கொல்லப்பட்டோர் விபரம்:
குறிப்பு:- இச்சம்பவத்தில் பாதிப்படைந்த அனைவரது பெயர் விபரங்களையும் பெறமுடியவில்லை.
மூலம்: தமிழினப் படுகொலைகள் 1956 – 2001 நூல்.