ஈழத்தின் வடக்கே யாழ்பாண நகரின் ஒரு பழமை மிக்க ஊர்களில் ஒன்று இணுவில் பல கலைஞர்களையும் நாட்டின் தியாகத்துக்கு மாவீரர்களையும் போரளிகளையும் மண்ணுக்கு தந்த ஊர்களில் இணுவிலும்ஒன்று யாழ் மாவட்ட நிர்வாக எல்லைக்குட்பட்ட இணுவில் யாழ்பாண நகரில் இருந்து காங்கேசந்துரையை இணைக்கும் பிரதான வீதியில் ஜந்து மையில் தொலைவில் அமைந்துள்ளது இணுவில் கிழக்கு இணுவில்மேற்கு இணுவில் என இரண்டு பிரிவுகளாக காணப்படுகிறது. சிறுதோட்டங்கள் மற்றும் மிகப்பிரதானமாக புகையிலை உற்பத்தியில் பிரசித்திபெற்ற ஊராகும். கோயில் இல்லா ஊரிலே குடியிருக்காதே என்னும்முதுமொழியை ஏற்றது போல் எங்கு பார்த்தாலும் சைவ மற்றும் கிருத்தவ ஆலயங்கள் காணப்படுகிற ஓர் அழகியல் நிறைந்த ஊரகும் இணுவில்
கல்வி கண் என்னும் கருப்பொருளில் பற்றுக்கொண்டது போல் இணுவில் கலையோடு கல்வியை அள்ளித் தெளிக்கும் இரண்டு பிரதான பாடசாலைகளை தன்னகத்தே கொண்டுள்ளது இணுவில் மத்திய கல்லூரிமற்றும் இணுவில் இந்துக் கல்லூரி
இணுவில் ஈழத்தின் இலக்கிய பெருவெளியில் பயணிக்க விட்ட பிரதான கலை கலஞ்சியமாக
இணுவில் சின்னத்தம்பிப் புலவர் – இலக்கணஇ இலக்கிய நூலாசிரியர்
ஆர். சிவலிங்கம் (உதயணன்) – சிறுகதைஇ புதின எழுத்தாளர்
இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் – எழுத்தாளர்
பண்டிதர் ச.வே.பஞ்சாச்சரம்
பண்டிதர் கா. செ. நடராசா
இ. இரத்தினம்
இவர்கள் இருக்க கலைத்துறைக்கும் வஞ்சகம் செய்யாமல் பலரை தமிழ் உலகத்துக்கு தந்துள்ளது இணுவில் விஸ்வலிங்கம் தவில்
வி. உருத்திராபதி – வய்ப்பட்டுஇ நாதஸ்வரம் புல்லாங்குழல் ஹார்மோனியும்
வி. கோதண்டபாணி – நாதஸ்வரம்
வி. தெட்சணாமூர்த்தி – தவில் கலைஞர்
உ. இராதாகிருஷ்ணன் – வயலின்இ வாய்ப்பாட்டு
கே. ஆர். சுந்தரமூர்த்தி – நாதஸ்வரம்
கே. ஆர். புண்ணியமூர்த்தி – தவில்
இணுவில் சின்னராசா – தவில் கலைஞர்
இணுவில் கணேசன் – தவில் கலைஞர்
இயல் இசை வாரிதி என். வீரமணி ஐயர் – இசைக் நடனக் கலைஞர்
க. சண்முகம்பிள்ளை மிருதங்கக் கலைஞர்
கலைச்செல்வன் ஏரம்பு சுப்பையா
ஈழத்துப்பித்தன் இணுவையூர் மயூரன் – எழுத்தாளர்இ வானொலி கலைஞர் கவிஞர்
ஆன்மிக பூமியில் ஆன்மீகத்தை அள்ளித் தெளிக்கும் இணுவில்
பரராஜசேகரப் பிள்ளையார் கோயில்
இணுவில் காரைக்கால் சிவன் கோவில்
சிவகாமி அம்மன் கோயில்
செகராஜசேகரப் பிள்ளையார் கோயில்
இணுவில் கந்தசுவாமி கோயில்
மஞ்சத்தடி அருணகிரிநாத சிவசுப்பிரமணியர் திருக்கோவில்
இணுவில் இளந்தாரி கோயில்
இணுவில் அண்ணமார் கோயில்
இணுவில் கிழக்கு கப்பனைப் பிள்ளையார் கோயில் (அரசோலைப் பிள்ளையார் கோயில் எனவும் வழங்கப்படுகின்றது)
இணுவில் தெற்கு ஞானலிங்கேஸ்வரர் கோவில்
இணுவில் வைரவர்
பல ஆன்மீக மற்றும் இலக்கியச் சிறப்பு பெற்ற இணுவில் கலையோடு கல்வியும் உழவோடு உதிரம் நிறைந்த தமிழ் உணர்வையும் வளர்த்த நிற்கிறது
ஆரியச் சக்கரவர்திகள் காலத்தில் இணுவில் புகழ்பெற்ற ஊராக காணப்பட்டுள்ளது 13ம் நூற்றாண்டில் புகழ்பெற்ற பிரதேசமாக இணுவில் காணப்பட்டது என்பதற்று யாழ்ப்பாண வைபவமாலை சான்றுகூறுகின்றது பரராஜசேகரப் பிள்ளையார் கோயில் இ செகராஜசேகரப் பிள்ளையார் கோயில் இவ்விரண்டு கோயில்களும் ஆரியச் சக்கரவர்த்திகள் என்னும் அரசபரம்பரை யாழ்பாண இராசதாணியை ஆண்டபோது அந்த அரசபரம்பரையின் மன்னர்களின் பெயரில் இக்கோவில்கள் உருவாக்கப்பட்டுள்ளது இணுவிலில் மிகப்பொரிய வரலாற்றுத் தொடர்பும் கலை இலக்கிய பாரம்பெரியமும் கொண்டு ஈழ விடுதலைக்கு தன்தியாகத்தையும் விதைத்து காத்து நிற்கிறது இணுவில்
வட்டக்கச்சி
வினோத்