×

ஊர் நோக்கி – கொக்குவில்

இலங்கையின் வடக்கே ஈழ நாட்டின் யாழ்பாண மாவட்டத்தின் வடக்குப்பகுதியில் இருந்து இரண்டு மையில் தொலைவில் யாழ் மாநகர சபையின் வடக்கு எல்லையாக அமைந்துள்ள பிரதேசம் கொக்குவிற் பகுதியாகும் இப்பிரதேசம் நீர்வளம் செழித்த சேலைகளாக இருந்த காலப்பகுதியில் இப்பகுதி எங்கும் கொக்கு இனப் பறவைகள் இங்குள்ள சோலைகளில் நிறைந்து காணப்பட்டதால் இப்பிரதேசம் கொக்குவில் என அழைக்கப்படுவதாக ஒரு கூற்று நிலவுகின்றது.

இந்த ஊரை குறிப்பிடும் போது திரு சபாரத்தின முதலியார் கொக்கூர் என தனது பிரபந்தங்களில் குறிப்பிட்டுள்ளார். இவ்வூரைச்சேர்ந்த செவ்வேள் அன்பர் திரு செ .வேலாயுதபிள்ளை அவர்கள் கொக்கூர் குமரன் ஆற்றுப்படை என்னும் பிரபந்தத்தில் இவ்வூர் முருகனின் சிறப்பை கூறும் போது ‘ தக்கோர் புகழுந் தகைசால் கொக்கூர்ப் பதியமர் குமரன் தானே’ என முருகனை விழிக்கிறார்.
கொக்குவிலின் எல்லைகளாக வடக்கே தாவடி மற்றும் கோண்டாவிலும் கிழக்கே திருநெல்வேலியும் தெற்கே வண்ணார்hண்ணையும் மேற்கே ஆனைக்கோட்டையும் அமைந்துள்ளன. கொக்குவில் கிழக்கு கொக்குவில் மேற்கு மற்றும் கொக்குவில் மத்தியென மூன்று பிரதான  பிரிவுகள் காணப்படுகின்றன தமிழர் மரபுகளை செல்லும் பாரம்பரியம்மிக்க கேணிகள் மடங்கள் சுமைதாங்கிக்கற்கள் ஆவுரஞ்சிக்கற்கள் ஆவுண்ணி நீர்தொட்டிகள் இங்கே காணப்படுகின்றன மற்றும் சமய நிறுவனங்கள் மற்றும் பிரபலம் மிக்க மிகப் பழமையான பாடசாலைகள் இங்கு இன்றும் புதுப்பொழிவுடன் கல்வி வழங்கிக்கொண்டுள்ளது . இப்பிரதேசத்தில் ஒரு தொழில்நுட்பக்கல்லூரியும் அமையப்பெற்றுள்ளது.

ஒல்லாந்தர் காலத்தில் அமைக்கப்பட்ட வடிகால் முறைகளும் மற்றும் சில நீர்தேக்கங்களும் தற்போது தூர்ந்து காணப்படுவதால் கடும் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.

இங்கு பாரம்பரிய கைத்தொழிலான சுறுட்டு உற்பத்தி காணப்பட்டது புகையிலையில் தயாரிக்கப்படும் ஒரு புகைத்தல் பொருனாகும் இது தயாரிக்கும் சுறுட்டு கொட்டில்கள் இங்கு அதிகம் காணப்பட்டன வை எஸ் எஸ் கே சுறுட்டுகள் மற்றும்  கனகலிங்கம் சுறுட்டுக்கள் என பல சுறுட்டு நிறுவனங்கள் தென் இலங்கை சிங்கள நாட்டுக்கும் மலையகப் பகுதிகளுக்கும் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன சுறுட்டுக் கொட்டில்களில் பாரம்பெரிய வசன நடை கதை வாசிப்பு முறை இருந்து வந்தது.

தற்கோது பல பல்துறை கலைஞர்கள் அறிஞர்கள் சமயத்தலைவர்கள் அரசியல் தலைவர்கள் இலக்கியாதிகள் மாவீர்கள் போராளிகள் எனப் பலரை இம் மண்ணுக்கு சிறப்புற தந்த கொக்குவில் இன்றும் தாய் மண்ணுக்கும் தமிழுக்கும் சேவைசெய்து வருகின்றது.

வட்டக்கச்சி வினோத்

 

guest
2 Comments
Inline Feedbacks
View all comments