
மண்டூர் ஈழத்தின் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு நகரிலிருந்து தெற்கே சுமார் நாற்பது மைல்களுக்கப்பால் அமைந்துள்ள ஒரு கிராமம்.
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நாநிலங்களையும் கொண்டதாக இக்கிராமம் காணப்படுகிறது.
முருகன் சூரனை ஆழித்த போது முருகன் கையில் இருந்த வேல் மண்டூர் முருகன் ஆலயத்தில் இன்னும் உள்ளதாக நம்பப்படுகிறது மீக நீண்ட வரலாறும், ஆன்மீக தொடர்புடைய மண்டூர் புண்ணிய பூமியா திகழ்கின்றது.
மட்டக்களப்பு வாவியின் தெற்குப்புறத்தே வாவிக் கரையோரமாக அமைந்துள்ள ஒரு பாரம்பரிய விவசாயக் கிராமம் மண்டூர் திகழ்கிறது. இங்குஅமைந்திருக்கின்றமுருகன் ஆலயம் ‘சின்னக்கதிர்காமம்’ என்று அழைக்கப்படும் சிறப்பு பெற்றது. கிழக்கிலங்கையின் திருப்படைக் கோயில்களில் இந்த ஆலயம். பண்டையமன்னர்களின் மதிப்பும் மானியங்களும் நிருவாக அமைப்பும் பெற்றதாகக் கொள்ளப்படுகின்றது.
முற்காலத்தில் வகுக்கப்பட்ட நிருவாகஅமைப்பும் பழைய வழிபாட்டு பூசை மரபுகளும் இன்றுவரை பேணப்பட்டு கட்டி பாதுகாத்து வருவதே இவ்வாலயத்தின் சிறப்பாகும். மட்டக்களப்பின் கிழக்குப் பகுதியிலே முக்குவ வன்னிமைகள் சிற்றரசர்களாக இருந்தனர்.
வன்னிமையின் தலைமையில் கோவில் அமைப்பும் நிருவாக ஒழுங்குகளும் வகுக்கப்பெற்றன. அவர்களால் பல மானியங்களும் கோவில் பரிபாலனத்திற்காக வழங்கப் பெற்றிருந்தன. ஒல்லாந்தரின் ஆட்சிக்காலம். மத வெறி பிடித்த அவர்கள் காணும் சைவக் கோயில்களை எல்லாம் இடித்தழித்தார்கள். மரங்கள் அடர்ந்த காட்டுப் பகுதியில் இருந்ததால் மண்டூர் முருகன் கோயில் தப்பித்திருந்தது. ஆனால், ஆவணி விழாப் பறை ஓசை ஒல்லாந்த தளபதியின் காதில் கேட்கவே, பீரங்கி மூலம் இக்கோயிலையும் தகர்க்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஒல்லாந்தப் படை கோயிலை இடிக்க வருவதை உணர்ந்தார் பூசாரி பெருமானிடம் இரந்து வேண்டினார். அப்போது ஒல்லாந்தப் படைக்கு எதிராய் குளவிகள் மொய்த்துக் குத்த குதிரைகள் விழுந்தன. துப்பாக்கிகள் சரிந்தன. இறந்தவர் போக ஏனைய ஒல்லாந்தப் போர் வீரர்கள் ஓடினர்.
இப்படியான ஆன்மீக நம்பிக்கை மிகு பூமியாக மண்டூர் இருக்கிறது. வேடர் வழிபாட்டு மரபுகளும் வேலன் வெறியாட்டு மரபுகளும் நிறைந்த தலமாக உள்ளது மண்டூர். விண்டூர மழை பொழியுஞ் சிறப்பதனால் வளம் மலிந்து மிகுந்து தோன்றும் மண்டூரில் உறை முருகன் மலரடிக்கோர் திருப்பதிகம் மரபிற் சொற்றான் கண்டூமினிய மொழிப் பெரியதம்பிப்பிள்ளை எனும் கலை வல்லோனே’ எனும் பாடலானது வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாற் பாடப் பெற்றது இவூரும் இவ்வூரின் முருகன் கோவிலும்.
ஈழப் போராட்ட வரலாற்றில் மண்டூர் தனது தியாகத்திலும் வீரத்திலும் தலைநிமிர்ந்து நின்றது எண்ணற்ற போராளிகளையும் மாவீரர்களையும் நாட்டுப்பற்றாளர்களையும் அறிஞர்கள், கல்வியாளர்கள் படைப்பாளிகள், கலைஞர்கள், பாரம்பரிய தமிழ் கலைகளை பாதுகாக்கும் அண்ணாவிமார்கள் என பலரை ஈழ நாட்டுக்கு தந்து நிமிர்ந்து நிற்க்கிறது மண்டூர்.