×

ஊர் நோக்கி – மூளாய் 

ஊர் நோக்கி – மூளாய் 

ஈழ நாட்டின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு தொன்மை வாய்ந்த கிராமம் மூளாய். இது யாழ் நகரிலிருந்து 12கீ.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. வட்டுக்கோட்டை, தொல்புரம், பொன்னாலை, சுழிபுரம் என்னும் கிராமங்களால் சூழப்பட்டு இயற்க்கை எழில் நிறைந்த கிராமமாகும். ஒரு காலத்தில் இக் கிராமத்திலிருந்து வெற்றிலையும் சிறு தானியங்களும் ஏற்றுமதி செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது. தற்போதும் விவசாயத்தை தமது பண்பாடாகக் காணப்படுகின்றது. பரந்த வயல் நிலைப் பரப்புக்கள் தோட்டங்கள் என்பன கிராமத்தின் வேளாண்மை விருத்தியை விளக்கி நிற்கின்றன. பாரம்பரிய தொழிலான உழவுத் தொழிலை மேற்கொள்பவர்கள், கல்விமான்கள், கவிஞ்ஞர்கள், வைத்தியர்கள், கலைஞர்கள் என்று பல துறை அறிவும் அனுபவமும் பெற்றவர்கள் வாழும், வாழ்ந்த கிராமம் மூளாய் கிராமம்.

ஈழப்போரட்ட காலத்தில் மண்ணுக்காக தியாகத்தை விதைத்த மூளாய் கிராமம் பல மாவீரர்களையும் போராளிகளையும் தேசப்பற்றாளர்களையும் ஈழ விடுதலைக்குத் தந்துள்ளது.

நீண்ட காலமாக இயங்கிவரும் கூட்டுறவு வைத்தியசாலைகள் பாடசாலைகள், இளைஞர் அமைப்புக்கள், நூல்நிலையங்கள், முன்பள்ளிகள், அறநெறிப்பாடசாலைகள், திறன்மிகு விளையாட்டுக்கழகங்கள், என பல்வேறு சமூக அமைப்புக்கள் மூலாய் மண்ணின் விருத்திக்காக இயங்கிக்கொண்டுள்ளது. தமிழர் தம் பண்பாட்டு சைவ ஆன்மீக செயற்பாட்டோடு கிராமியத் தெய்வ வழிபாட்டு முறைகள் என்பவற்றைக் கொண்டும் முத்தமிழ் கலைகளை இன்றும் பாதுகாத்து தமிழ் மரபு மாறாத ஈழக்கிராமங்களில் ஒன்றாக இன்னும் இருக்கும் மூலாய் ஈழத்தமிழரின் மூச்சாய் பயணிக்கிறது.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments