
திருகோணமலை கோணேசர் திருக்கோவில் தொடர்பான குளக்கோட்டன் ஏடுகளை British library இல் நண்பர் Devashan Kunasingam கண்டறிந்திருந்தார். அந்தவகையில்…. யாழ்ப்பாணத்தில் உள்ள பொன்னாலை எனும் ஊரில் ஏழு வீதிகளுடன் வரதராஜப் பெருமாள் ஆலயம் அமைந்து இருந்ததாகவும் அந்த வீதிகள் இடிக்கப்பட்டு சங்கானையில் தேவாலயம் அமைக்கப்பட்டதாகவும் (இப்போதும் உள்ளது)கூறப்படுகிறது.அந்தக் கற்கள் யானை மூலம் இழுத்துச் செல்லப்பட்ட வீதி டச்சு வீதி எனவும் அதில் பத்து யானைகள் நீர் அருந்தியதாகக் கருதப்படும் கேணி பத்தானை கேணி என இப்போதும் கூறப்படுகிறது. அங்கே சில மீதமான கற்கள் இப்போதும் உள்ளன.
இது தொடர்பான ஆவணங்கள்/ குறிப்புகள் ஏதும் உள்ளதா என Portugal, Netherland libraries and British library இல் தேடிப் பார்க்கவேண்டும் அந்த ஏழு வீதிகளில் வெளிச் சுற்றில் இருந்த முதலாம் வீதியில் இப்பொழுதும் பிள்ளையார் கோவிலும் குளமும் உள்ளது. அந்த ஏழு வீதிகள் கொண்ட அந்தக்கால ஆலயத்தின் விஸ்தீரணத்தை கற்பனை செய்தால் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை விடப் பிரமாண்டமாக இருந்திருக்க வாய்புள்ளது.
அப்படிப் பார்த்தால் 1500 களின் முன் அந்தப் பிரதேச மக்கள் செல்வச் செழிப்புடன் வாழ்ந்திருக்கவேண்டும். Central London இல் உள்ள St Bartholomew hospital 1500 கட்டப்படதாக கூறப்படும் பழைய கல்வெட்டு, கட்டடங்களை பார்த்தபோது புரிந்தது நாம் ஒன்றும் குறைந்தவர்கள் இல்லை என…. ஆதாரங்களுடன் ஆவணப்படுத்தாமையும் மரபுரிமைச் சொத்துக்களை பாதுகாக்காமையுமே எமது பெரும் குறை.
Devashan Kunasingam kirishna Krishna Kannan