×

உடலுறவை குறிக்கும் இலக்கியச் சொற்கள் யாவை? காமம் அசிங்கம் அல்ல! அது,ஒரு கலை!!

உடலுறவை குறிக்கும் இலக்கியச் சொற்கள் யாவை? காமம் அசிங்கம் அல்ல! அது,ஒரு கலை!!

காமம் ஊர் / உடலுறவு

காமம் (ஊர்) – கதிர்காமம், பழையகமம், கொடிகாமம், குடாகமம், வலிகாமம், பழுகாமம், அம்பகாமம், பனங்காமம், தம்பலகாமம், வீமன்காமம், சாகாமம்(திருக்கோவில்), இறக்காமம், வெல்காமம், உரகிரிகாமம், கிரிகண்டகாமம், மேன்காமம், ஊர்காமம், இளகாமம், தேகாமம், உறுகாமம், மாகாமம், முதலியான்காமம், சந்தணகாமம்(கல்லோயா), வத்துகாமம், கணகாமம், கும்பகாமம், நந்திகாமம், காணுகாமம், சேரன்காமம் (அம்பாறை எல்லையூர்), உருக்காமம், வெலிகாமம், மாகாமம் (இன்றைய திஸ்ஸமகாராமை– கிரிந்த பகுதி)

மேலே குறிப்பிடப்பட்டுள்ள அத்தனை பெயர்களும் ஒருங்கிணைந்த இலங்கைத்தீவினுள் உள்ள ஊர்களைச் சுட்டுகிறது.. (இலங்கையின் ஏனைய இடங்களில் இது போன்று 200க்கும் மேலை உண்டு என்பதையும் அறிக..ஆனால் அவை எல்லாம் கம, கமுவ என்று முடியும்.) இவ்வாறு சுட்டப்பட்ட ஊர்களில் பல கமத்தினையே ஆதிகாலம் தொட்டு கடந்த சில ஆண்டுகள் வரை செய்து வந்துள்ளன. கமம் செய்ததினால் இவ்வூர்ப்பெயர்கள் கமம் என்று வழங்கி காலப்போக்கில் காமம் என்று நீண்டிருக்கலாம் என்பது என் துணிபு! இன்றும் இவ்வாறான பகுதிகள் சிங்கள மொழியில் கமம் என்ற தமிழ்ச்சொல்லின் ‘கம’ என்ற சிங்களத் திரிபுடன் விளங்குவதைக் ஒப்புநோக்குக.

1-காமம் (உடலுறவு ) –

2-அதவுபாசனம்

3-அமைவு

4-ஆடுதல்

5-இங்கிதம்

6-இச்சித்தல்

7-இண்டனம்

8-இணைவிழைச்சு

9-இணைவு

10-இயைபு

11-இயைவு

12-இளந்தை

13-இன்பம்

14-உடந்தை

15-உடனுறைவு

16-ஊடுகை

17-ஊடுதல்

18-ஒட்டிப்பிணைதல்

19-ஒண்ணல்

20-ஒவ்வுதல்

21-ஒன்றிப்பிணைதல்

22-கங்கம்

23-கலத்தல்

24-கலப்பு

25-கலவி

26-களி

27-கிரீடை

28-கூடல்

29-கூட்டுண்ணுதல்

30-கெழுமல்

31-சங்கம்

32-சங்கமம்

33-சங்கபோட்டம்

34-சுக்குதல்

35-சேர்ந்தலை

36-தல்லு

37-தொந்தம்

38-பாலுறவு

39-புஞ்சுதல்

40-புணர்ச்சி

41-புல்குதல்

42-புல்லுதல்

43-புலத்தல்

44-பொருந்துதல்

45-பொலிதல்

46-பொல்லுதல்

47போகம்

48-மலிதல்

49-முகிரம்

50-முயங்கல்

51-விழைதல்

52கூடியும் கூட்டமின்மையும் – புலவி

53-புலவி நீட்டல் – துனி

54-செல்ல சண்டை – ஊடல்

55-தோணியோடு – முத்தமிட்டுப் புணருதல்

56-பாயம் – புணர்ச்சி விருப்பம் (sexual desire)

57-கவுவுதல்

58-கலவிசெய்தல்

59-இரமித்தல்

60-புல்குதல்

61-புல்லுதல்

62-ஒட்டிப்பிணைதல்

63-ஒன்றிப்பிணைதல்

64-ஒன்றித்திளைத்தல்

65-சயனத்திணைதல்

66-சம்போகித்தல்

67-சையோகித்தல்

68-சிற்றின்பத்துறுதல்

இது பற்றி ஆய்ந்தவிடத்து இதைவிடவும் “ஓ” என்று ஓரெழுத்துச் சொல்லொன்றும் தரப்படிருக்கிறது. அதற்குத் தரப்பட்டிருக்கும் இரண்டு அர்த்தங்களில் இரண்டாவது அர்த்தம் மனமொத்தல். முதலாவது என்னவென்று நீங்கள் ஊகித்திருப்பீர்களென்று நினக்கிறேன்.

நன்னிச் சோழன்
வேணுகோபால் மாதவன்

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments