
உலக புத்தக தினம் 23.04.2025
புரட்சிப் பாதையில் கைத்துப்பாக்கியை விட பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே.
-லெனின்
ஒரு நூலகம் திறக்கப்படும் ஊரில் ஒரு சிறைச்சாலை மூடப்படும்.
-விவேகானந்தர்
ஆயிரம் புத்தகங்களை வாசித்தவன் ஒருவன் இருந்தால் அவனைக் காட்டுங்கள்; அவனே எனது வழிகாட்டி!
-ஜூலியஸ் சீசர்
ஒருகோடி கிடைத்தால் என்ன செய்வீர்கள்
என்று கேட்டபோது, ஒரு நூலகம் கட்டுவேன் என்று பதிலளித்தாராம்.
-மகாத்மாகாந்தி
உடற்பயிற்சி உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. புத்தகம் வாசிப்பது மனதை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.
-ஜோஸப் அடிசன்
பெண்களிடம் கரண்டியைப் பிடுங்கி விட்டு புத்தகம் கொடுத்தால் போதும்.
-தந்தை பெரியார்
புத்தகங்களை வாசிக்காத ஒருவனுக்கும் வாசிக்க முடியாத ஒருவனுக்கும் எந்த நன்மை செய்யக்கூடிய வித்தியாசமும் இல்லை
-மார்க் ட்வைன்
தனக்கு விருப்பமான புத்தகங்களை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்வது நல்ல வாசகரின் இயல்பான பணி; அவரால் பிடித்த புத்தகங்களை மனதில் புதைத்து வைத்துவிட்டு சும்மா இருக்க முடியாது.
-எஸ்.இராமகிருஷ்ணன்
புத்தகம் இல்லாத ஒரு அறை, உயிரில்லாத உடலுக்கு ஒப்பானது.
-சிசரோ
நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன்.
-ஆபிரகாம் லிங்கன்
உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனதுக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு.
-சிக்மண்ட் ஃப்ராய்ட்
போதும் என்று நொந்துபோய், புதுவாழ்வைத் தேடுகிறீர்களா… ஒரு புதிய புத்தகத்தை வாங்கி வாசிக்கத் தொடங்கு.
-இங்கர்சால்
ஒரு எழுத்தாளன் ஒரு புத்தகத்தைத் தொடங்கி வைக்கிறான்… வாசகன் அதனை முடித்து வைக்கிறான்.
-சாமுவேல் ஜான்சன்
உண்மையான வாசகன், வாசிப்பதை முடிப்பதே இல்லை!
-ஆஸ்கார் வைல்ட்
ஒரு நல்ல நூலைபோலச் சிறந்த நண்பனும், நெருக்கமான உறவினனும் எனக்கு வேறு இல்லை.
-அறிஞர் அண்ணா
புத்தகங்கள் இல்லையென்றால் சரித்திரம் மெளனமாகிவிடும். இலக்கியம் ஊமையாகிப்போகும். புத்தகம் என்பது மனித குலமே அச்சு வடிவில் இருப்பது போல.
-பார்பரா சச்மன்
கவலைகள் துறந்து புது உலகம் திறக்க புத்தகத்தை திறங்கள்.
-க.விக்ரம்
எழுத்துக்களின் எண்ணங்களின் சிந்தனைகளின் கற்பனைகளின் உருவடிவம் புத்தகம்!
-ஜாக் பின் கௌதம்
ஒரு புத்தகத்தை கையில் எடுக்கும் போது மிகவும் ஜாக்கிரதையாக இருங்கள். நீங்கள் கையால் எடுத்திருப்பது உண்மையில் ஒரு மனிதனின் இதயத்தை.
-வால்ட் விட்மன்
இந்த வாழ்வின் ஆகச்சிறந்த கேளிக்கை… கொண்டாட்டம்… ஓசையின்றி நடந்துகொண்டிருக்கிறது… அதுதான் புத்தக வாசிப்பு.
-எமர்சன்
உயிரின் சுவாசமல்லவா புத்தகம்!
உனக்குள் ஒரு சூரியனல்லவா புத்தகம்!
அட்டையிட்ட அமுதமல்லவா புத்தகம்!
உனக்கு வரம் தர யாரோ இருந்த தவமல்லவா புத்தகம்…!
-கவிப்பேரரசு வைரமுத்து
ஒரு நாளைக்கு ஒரு மணிநேர புத்தக வாசிப்பு என்பது தீர்த்து வைக்காத பிரச்னையே இல்லை.
-சார்லஸ் டிக்கன்ஸ்
உங்களிடம் ஒரு பத்து ரூபாய் இருந்தால் என்ன செய்வீர்கள்..? நான் உடனடியாக ஒரு புத்தகம் வாங்குவேன்…
-அப்துல்கலாம்
நேரம் வீணாகிறதே என்று பதட்டப்பட வேண்டிய அவசியம் அற்றவர்கள்… புத்தகங்களை மட்டுமே வாசிப்பார்கள்…
-பேரறிஞர் அண்ணா
பல்வேறு நாடுகளின் கலாச்சாரம் மற்றும் மக்களின் அடித்தள வாழ்வையும் ஒரு புத்தகம் புரிய வைத்துவிடுகிறது…
-ஆண்ட்ரூ லாங்
மிகவும் அமைதியான பிரச்னையற்ற நண்பன், நம்பத் தகுந்த உண்மைமிகு மனோதத்துவ ஆலோசகன், ஒருபோதும் கோபப்படாத த ஆழ்ந்த பொறுமைசாலியான ஆசிரியன் ஒரு புத்தகம் தான்!
-சார்லஸ் எலியட்
உலக வரைப்படத்திலுள்ள மூலைமுடுக்குகளுக் கெல்லாம் போக ஒரு நூலகத்துக்குச் செல்.
-டெஸ்கார்டஸ்
ஒரு நல்ல புத்தகம் திறந்து கொண்டால், நரகத்தின் வாசல் மூடப்படும்.
-வைரமுத்து
பழங்காலத்திய மகா புருஷர்களை நேரில் தரிசித்து, அவர்களுடன் உரையாட வேண்டுமா? நூலகத்துக்குப் போ.
-மாசேதுங்
நான் மட்டுமே வாழவேண்டும் எனும் நிர்பந்தத்தோடு தனி தீவுக்கு அனுப்பினாலும் போவதற்கு நான் தயார்… புத்தகங்களோடு போக அனுமதித்தால்.
-ஜவஹர்லால் நேரு
என் முப்பதாண்டுகால சிறை வாழ்வில் என் ஒரே புகலிடமாய் இருந்தவை புத்தகங்களே.
-நெல்சன் மண்டேலா
சில புத்தகங்களை சுவைப்போம்… சிலவற்றை அப்படியே விழுங்குவோம்… சில புத்தகங்களை மென்று ஜீரணிப்போம்!
-பிரான்சிஸ் பேக்கன்
உன் நூலகத்துக்குள் நுழைந்து ஒவ்வொரு புத்தகத்தையும் கையிலெடுத்து வாசிக்க அஞ்சாதே!
-ட்விஸட் டி.ஐசனோவர்
ஆற்றலை பெறவே வாசிக்கிறோம். புத்தகங்கள் வாசிக்கும் ஒருவன்தான் முழுமையான உயிர்ப்போடு இருக்கிறான். புத்தகம் இருளில் நடக்க, கடக்க ஒளியாக உள்ளது.
-எஸ்ரா பவுண்ட்
ஒரு நல்ல நாவல் தனது கதாபாத்திரங்களை பற்றிய உண்மையை சொல்கிறது. ஒரு மோசமான நாவல் அதை எழுதியவனை பற்றிய உண்மையை சொல்கிறது.
-ஜி.கே.செஸ்டர்டன்
வாழ்வில் அற்புத மாற்றங்களை கொண்டு வரும் யோசனைகள் அனைத்தும் புத்தகங்களிலிருந்து வந்தவையே.
-பெல் ஹூக்ஸ்
“புத்தகம் சேமித்து பயனில்லை! புத்தகத்தில் உள்ளவை புத்தியில் சேமிக்கப்படவேண்டும்!”
வாசிப்பு பிரியர்கள் அனைவருக்கும்
#புத்தக_நாள்_வாழ்த்துகள்
நெடுங்கேணி சானுஜன்