
நாம் கீழடி, கொற்கையில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழி (தமிழ் பிராமி) எழுத்துக்கள் தான் மிகவும் பழைமையான எழுத்துக்கள் என நினைத்துக்கொண்டிருக்கின்றோம். அதற்கு முன்னரே ஈழத்தில் 1972 ஆம் ஆண்டு அனுராதபுரத்தில் சிரான் தெரணியகல மேற்கொண்ட ஆய்வில் கி.மு 7-5 ஆம் நூற்றாண்டைச் சேந்த பானை ஓடு ஒன்றில் தமிழ் பிராமி எழுத்துக்களைக் கண்டறிந்தார். அந்த பானை ஓட்டில் #தயா_குட என்ற வசனம் காணப்பட்டது.
இதன் பொருள் தயாவின் குடம் என்பதாகும். நாம் இந்த பானையோட்டை சாதாரணமாக நினைக்கக்கூடாது. ஈழத்தமிழர் வரலாற்றில் இது ஒரு முக்கியமான ஆவணமாகும். பாளி இலக்கியங்களில் விஜயனின் வருகை கி.மு 6 ஆம் நூற்றாண்டு இந்த பானையோட்டின் காலம் கி.மு 7-5 இதன் மூலம் விஜயன் இலங்கைக்கு வருகை தரும்போது இங்கு தமிழ் மொழியில் பரீட்சித்து பெற்ற ஒரு குழுவினர் இங்கு வாழ்ந்துள்ளமையினை சிங்கள தொல்லியல் ஆய்வாளரான சிரான் தெரணியகலவே ஒப்புக்கொண்டுள்ளார்.