தமிழீழ மாவீரர் நாள் -2005 நினைவொலி எழுப்பலும் சுடரேற்றலும் 27 ஆம் திகதி சுடரேற்றம் நேரத்தை தமிழீழ மக்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள் மாலை 6.05 மணிக்கு தமிழீழமெங்கும் சமகாலத்தில் அனைத்து ஆலய தேவாலய மணிகளும் ஒரு மணித்துளி நேரம் ஒலி எழுப்பும் இந்த நேரத்தை தொடர்ந்து எல்லா மக்களும் அகவணக்கம் செலுத்துவார்கள் .
இந்த நினைவொலி எழுப்பப்படும் போது காத்திருந்து ஒருமணித்துளி அகவணக்கம் செலுத்துவது அனைத்து மக்களினதும் கடமையாகும். நினைவொலி எழுப்பப்படும்போது நடந்தாயினும் வாகனத்திலாயினும் போனால் உடன் நின்று பின் ஒருமணித்துளி நேரம் அந்தந்த இடங்களிலேயே அகவணக்கம் செய்தல் வேண்டும். துயிலுமில்ல மைதான நிகழ்வில், பீடத்தில் சற்று உயரமான பெரியசுடர் நாட்டப்பட்டிருக்கும் மக்கள் வெள்ளம் உணர்வு கொந்தளிப்போடு மைத்தானத்தை சுற்றி நின்று தியாகங்களை நெஞ்சில் நினைத்திடத் தீச்சுடர் ஏற்றப்படும்.
அமைப்பின் முதன்மையானவர்கள் மத்திய சுடரை ஏற்ற மாவீரர்களின் பெற்றோர்கள், உரித்துடையோர்கள் தீச்சுடரை சமகாலத்தில் ஏற்றுவார்கள். ஒவ்வொரு இல்லங்களிலும், வாசல்களிலும் மாவீர்ரின் சுடரொலியை மக்கள் ஏற்றுவர்.
சுடரானது சுவாலை விட்டெரியும், ஒவ்வொரு சுடர்களிலும் மாவீரர்களின் முகங்கள் பிரகாசிக்கும் தமிழீழம் முழுவதும் சுடரொளி ஒங்கிப்பரவும். மக்கள் குமுறி எழுந்து கண்ணீர் விட்டு நிற்க தியாகிகளின் காவியங்கள் ஒவ்வொரு தமிழீழ மக்கள் உணர்வுகளிலும் மீட்டப்படும். சுடறேற்றி தியாக தீபங்கள் இவை எனக்கூறத்தக்கதாக நினைவு கூரப்பட வேண்டும். நட்சத்திரங்கள் போல தமிழீழம் எங்கும் மாவீரர் சுடர்கள் இந்நேரத்தில் ஒளிரவேண்டும் சிட்டி விளக்கேற்றக் கூடிய இடங்களில் தொகையான சிட்டி விளக்குகள் ஏற்றி நினைவு கூரலாம்.
வாசலில் தீப்பந்தங்கள் ஏற்றியும் பொது இடங்களில் பெரிய சுடர்கள் ஏற்றியும் நினைவு கூரவேண்டும். இந்தச் சுடறேற்றம் நிகழ்வானது விடுதலைப் பாதைக்கு உறுதியையும், உணர்வையும் கொடுத்து நிற்கின்றது. தழிழீழ மாவீரர் பணிமனை தமிழீழ மாமண்ணில் என்னென்றும் புலிவீரர் நடந்த கால் தடமிருக்கும் தமிழ் மாந்தர் உள்ளவரை என்றென்றும் அவர் நெஞ்சில் மாவீரர் படமிருக்கும்.
நன்றி. ஈழநாதம் 2005