தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்துறையின் கீழ் ஒரு பிரிவாக தமிழீழ மாணவர் அமைப்பு செயற்பட்டு வந்தது. இவ்வமைப்பின் உருவாக்கத்தில் தியாகி திலீபனின் பங்கு அளப்பரியது.
இவ்வமைப்பானது தமிழ் மாணவர்களின் கல்வியறிவை மேம்படுத்தல், மாணவர்களின் நலன் பேணல், வழிகாட்டல், ஒருங்கிணைத்தல் போன்ற பல வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வந்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாணவர் அமைப்பின் செயற்பாடுகளாக:
*பாடசாலைகள் தோறும் தமிழ்மாணவர் ஒன்றியம் என்ற கட்டமைப்பை உருவாக்கி, அவ் ஒன்றியத்தை வட்டம், பிரதேசம், மாவட்டம், நாடு என விரிவுபடுத்தி அதனூடாக பல செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது.
* பாரதி/ தாயகம்/ புனிதபூமி சிறுவர் இல்லங்கள்.
*போராலும், குடும்பச் சூழ்நிலையாலும் பாதிக்கப்பட்ட பெண்/ஆண் சிறுவர்களைப் பொறுப்பெடுத்து அவர்களிற்கான கல்வியையும் அடிப்படைத் தேவைகளையும் அளிப்பதே இதன் நோக்கமாகும்.
* அறிவியற்கழகம்.
2. நூலகம்
4. பாடசாலையை விட்டு போர், குடும்பச் சூழ்நிலையால் இடைவிலகிய மாணவர்களுக்கான கல்வியை வழங்கி அவர்களை மீண்டும் பாடசாலைகளில் இணைத்தல்.
இவ்நிதியமானது பல்கலைக் கழகத்திற்கு தெரிவாகியும் நிதியின்மையால் கல்வியை தொடர முடியாதுள்ள மாணவர்களிற்கான நிதியினை வழங்கி வந்தது.
* ‘நெம்பு’
இது இருமாதங்களுக்கு ஒரு முறை மாணவர்களிற்காக வெளியிடப்பட்ட சஞ்சிகையாகும். இதில் மாணவர்களின் ஆக்கங்களும் இடம்பெற்றிருக்கும்.
அன்றைய காலகட்டத்தில் மாவீரர் முரளி அவர்கள் மாணவர்களை இணைத்து பல வேலைகளை முன்னெடுத்துச் சென்றார்.
பின்னர் யாழ்ப்பாணத்தில் ‘பாலம்’ என்னும் மாணவர் அமைப்பு பணிமனையானது. எதிர்காலத் தூண்களான மாணவர்களின் கல்வியில் கவனம் செலுத்தி வந்ததோடு, மாணவர்கள் தம்மால் முடிந்த பின்களப்பணிகளை மேற்கொள்ள உதவியது. அந்தவகையில்
*மாணவர்களுக்கான முதலுதவிப் பயிற்சிகளை வழங்கியமை.
* மாணவர்களின் உதவியோடு பதுங்கு குழிகள் பாடசாலைகள், மக்கள் கூடும் இடங்கள் எல்லாம் அமைக்கப்பட்டது.
* போரில் விழுப்புண்பட்டு மருத்துவமனையில் உள்ள போராளிகளிற்கான பராமரிப்பில் உதவுதல்.
* போராளிகளுக்கான உலர்உணவுகளை மக்களிடம் சேகரித்தல்.
* பேரணிகள் நடைபெறும் போது ஒழுங்கமைத்தல் என பல்வேறு
வேலைத்திட்ங்களினூடாக மாந்த நேயமுள்ள, தலைமைத்துவம் பண்புள்ளவர்களாக மாணவர்களை வளர்த்தெடுக்க மாணவர் அமைப்பு உழைத்தது என்றால் மிகையில்லை.