×

ஈழத்துக் கல்வெட்டுகளும் நாணயங்களும் காட்டும் தமிழ்ப் பெயர்கள்:-

ஈழத்துக் கல்வெட்டுகளும் நாணயங்களும் காட்டும் தமிழ்ப் பெயர்கள்:-

ஈழத்தில் வரலாற்றுக்காலம் முதலே தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனரா? இல்லையா? என்றொரு வாதம் இன முரண்பாடு சார்ந்து நெடுங்காலமாக இருந்து வருகின்றது. இத் தீவில் ஆதிகாலம் முதலே தமிழர் வாழ்ந்து வருகின்றனர் என்பதற்குச் சார்பாக முன்வைக்கப்படும் சான்றுகளிலொன்று பழைய கல்வெட்டுகளிலும் நாணயங்களிலும் காணப்படும் தமிழ்ப் பெயர்களாகும். அத்தகைய தமிழ்ப்பெயர்களை பேரா.பரமு புஷ்பரட்ணம் எழுதிய `பண்டைய இலங்கையில் தமிழும் தமிழரும்` என்ற நூல் பட்டியலிட்டு விளங்கப்படுத்தும். அவற்றில் சிலவற்றினைப் பார்ப்போம்.

ஈழத்துக் கல்வெட்டுகளில் காணப்படும் தமிழ்ப்பெயர்கள்:-

* வேள்
* மருகன்
* பூதன்
* பூதி
* வேள் பூதன் (படம்1)
* மல்லன்
* திசன்
* குமணன்
* உதியன்
* குடும்பிகன்

ஈழத்து நாணயங்களில் காணப்படும் தமிழ்ப்பெயர்கள்:-
– உதியன்
– சாத்தன்
– பரதன் திசன் ( பரத திச, படம்2, மீன் அடையாளம் காண்க)

நல்லவேளை நமது முன்னோர்கள் தமிழ்ப்பெயர்களை வைத்துக் கொண்டதால் நாம் எமது ஆதிகால இருப்பினை இன்று உறுதி செய்ய முடிகின்றது. இன்று ஈழத்தில் வைக்கப்படும் பெயர்களை மட்டும் கொண்டு, வருங்காலத்தில் ஓர் ஆய்வு மேற்கொள்ளப்படுமானால், நிலைமை என்ன எனச் சிந்தியுங்கள்!

தமிழா! தமிழில் பெயர் வை

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments