முதலாம் மொழிப்போரின் இராண்டாம் களப்பலி தாளமுத்து. மொழிப்போரில் தன்னுயிர் ஈந்த இருவரில் நடராசன் மறைந்து இரண்டு மாதங்கள் கழித்து , 12-3-1939 அன்று சென்னைச் சிறையில் மாண்டபோது தாளமுத்துவின் வந்து 24. தாளமுத்து உயிரிழந்த நான்கே மாதத்தில் அவரது மனைவி குருவம்பாள் மொழிப்போர்க் களத்தில் குதித்துச் சிறை சென்றார்.