
மட்டக்களப்பு – தரவை மாவீரர் இல்லத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள்
தமிழ் மக்களின் விடுதலைக்காக தம் உயிரை தியாகம் செய்த வீரர்களை நினைவு கூறும் ‘மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு’ மட்டக்களப்பு – தரவை மாவீரர் இல்லத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் மிகவும் உணர்வு பூர்வமாக நடைபெற்றது.
இதன் போது மாலை 6.5 மணியளவில் பொதுச் சுடர் ஏற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மாவீர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் முன்னாள் போராளிகள் அரசியல்வாதிகள் மத தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மலர்தூவி ஈகைச் சுடர் ஏற்றி உணர்வு பூர்வமாக உயிர் நீத்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினர்.