×

யாழ்தேவி முறியடிப்பு

‘யாழ்தேவி’ என்ற பெயர் முன்னர் தென்னிலங்கைக்கும் யாழ்ப்பாணத்துக்குமி்டையில் போக்குவரத்தில் ஈடுபட்ட தொடரூந்தைக் குறிக்கும்.

28.09.1993 அன்று ஆனையிறவுப் பெரும்படைத்தளத்தின் ஒரு முனையான இயக்கச்சியிலிருந்து புலோப்பளை ஊடாக யாழ்ப்பாணம் நோக்கிய பெரும் படைநகர்வொன்றை சிறிலங்கா அரசபடை செய்தது. அந்தப் படை நடவடிக்கைக்கு அரசு சூட்டிய பெயரும் “யாழ்தேவி” தான்.

இராணுவம் முன்னேற எடுத்துக்கொண்ட நிலப்பகுதி தமிழர் சேனைக்குச் சாதகமற்ற பகுதி. முதன்மைச் சாலையான A-9 பாதையூடாக முன்னேறாமல் கடற்கரைப் பக்கமாக, முழு வெட்ட வெளிக்குள்ளால் இராணுவம் முன்னேற்ற முயற்சியை மேற்கொண்டது. அந்த வெட்டையில் இராணுவத்தை எதிர்த்து கடும்சமர் புரிவதென்பது புலிகளுக்கு மிகவும் பாதகமான நிலை. ஆனாலும் புலிகள் அச்சமரை எதிர்கொண்டனர்.

அந்த நடவடிக்கை நடந்தபோது புலிகள் பெரியதொரு வலிந்த தாக்குதலுக்குத் தம்மைத் தயார்படுத்திக் கொண்டிருந்தனர். அதே ஆண்டு நவம்பர் தொடக்கத்தில் நடத்தப்பட்ட பூநகரிக் கூட்டுப்படைத்தளம் மீதான ‘தவளைப் பாய்ச்சல்’ நடவடிக்கைக்கான ஆயத்தமே அது. அணிகள் கடுமையான பயிற்சியை மேற்கொண்டிருந்த சமயம் எதிரி புதிய களமுனையொன்றைத் திறந்திருந்தான். எப்படியும் இந்த முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தவேண்டிய தேவை இருந்தது.
தவளைப் பாய்ச்சலுக்காகத் தயாராகிக் கொண்டிருந்த அணிகளை ஒருங்கிணைத்து தளபதி பால்ராஜ் முறியடிப்புத் தாக்குதலை நடத்துகிறார்.

புலோப்பளை வெட்டையில் புலியணிகள் மிக நன்றாக உருமறைத்துப் பதுங்கியிருந்தன. எந்தக் காப்புமற்ற வெட்டவெளி. முன்னேறிய படையினர் அன்று காலையும் தொடர்ந்து முன்னேறினர். பதுங்கியிருந்த புலியணிகளை அவர்கள் காணவில்லை. அவ்வளவு திறமையான உருமறைப்பு. கைகலப்பு நடக்குமளவுக்கு மிக நெருக்கமாக வந்தபின் இராணுவத்தினர் மீது புலியணிகள் கடுமையான தாக்குதலைத் தொடுத்தன. உச்சபட்ச திகைப்புத் தாக்குதலாக அமைந்த அந்த அதிரடியில் நிலைகுலைந்தது சிறிலங்கா அரசபடை. அவர்கள் சுதாரித்து அணிகளை ஒழுங்கமைத்து புலிகளின் தாக்குதலை எதிர்கொள்வதற்குள் கணிசமான இராணுவத்தினரை இழந்திருந்தனர்.

தன்னை மீளமைத்துக்கொண்ட இராணுவம் தொடர்ந்தும் மிக மூர்க்கமாகத் தாக்கியபடி முன்னேறியது. புலோப்பளை வெட்டையில் மிகக்கடுமையான சமர் நடந்தது. அரசபடையினரின் முக்கிய பலமாகக் கருதப்பட்ட டாங்கிகளில் இரண்டை புலிகள் அழித்தனர். எதிரித்தரப்பில் இழப்புகள் அதிகமாகிக்கொண்டு வந்தது. இறுதியில் தனது முன்னேற்ற முயற்சியைக் கைவிட்டு பழையபடி இயக்கச்சிக்கே திரும்பியது இராணுவம்.

வெற்றிகரமாக அந்த “யாழ்தேவி” நடவடிக்கை புலிகளால் அன்று முறியடிக்கப்பட்டது. அதுமட்டுமன்றி திட்டமிட்டபடி பூநகரி மீதான தமது பாய்ச்சலையும் நடத்தினர் புலிகள்.

புலோப்பளைச் சமர் புலிகளின் போரியல் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனை. அதாவது முழுமையாக தமக்குச் சாதகமற்ற வெட்டவெளியில் எதிரியின் மிகப்பெரும் படையெடுப்பை எதிர்கொண்டு முறியடித்திருந்தனர்.

இதில் கிளிநொச்சிக் கோட்ட சிறப்புத் தளபதியாக இருந்த லெப்.கேணல் நரேஸ்/நாயகன் உட்பட எண்பத்தைந்து போராளிகள் வீரச்சாவடைந்தனர்.

அவர்களின் விபரம் வருமாறு

லெப்.கேணல் நாயகன் (நரேஸ்) (சிங்கராசா அருள்நாயகம் – முல்லைத்தீவு)

மேஜர் துஸ்யந்தன் (தர்மலிங்கம் ஜெயக்குமார் – முல்லைத்தீவு)

மேஜர் உதயகுமார் (கிச்சான்) (சீமான்பிள்ளை கிறிஸ்ரி – மன்னார்)

மேஜர் செந்தில் (அந்தோனிப்பிள்ளை பத்மநாதன் – மன்னார்)

மேஜர் செல்வம் (சோமு முருகேஸ் – மன்னார்)

மேஜர் யாழிசை (மனோ) (திருலோகசிங்கம் செல்வராணி – யாழ்ப்பாணம்)

மேஜர் சுகன்யா (நடராசா சுபாசினி – யாழ்ப்பாணம்)

மேஜர் செந்தூரன் (பிறேம்நாத்) (சிதம்பரப்பிள்ளை சிவரூபன் – யாழ்ப்பாணம்)

மேஜர் குமரன் (மணியம் சிறிசிவநாதன் – யாழ்ப்பாணம்)

கப்டன் நகுலன் (நாகமணி கேதீஸ்வரன் – மன்னார்)

கப்டன் உதயசீலன் (டென்சன்) (கணபதிப்பிள்ளை ஜெகதீஸ்வரன் – மன்னார்)

கப்டன் பொன்னன் (சிறிகாந்தன்) (நாகலிங்கம் சுரேந்திரன் – மட்டக்களப்பு)

கப்டன் மருத்துவன் (லுக்காஸ்) (சாமுவேல் செல்வானந்தன் – மன்னார்)

கப்டன் கருணா (சர்மிளன்) (அருள்நேசன் கின்சிலி – மன்னார்)

கப்டன் கல்யாணி (தர்மலிங்கம் ரேணுகாதேவி – திருகோணமலை)

கப்டன் அன்பழகி (அபி) (சபாபதி இலட்சுமி – திருகோணமலை)

கப்டன் குயிலி (சுதா) (இராசேந்திரம் இன்பவதினி – மட்டக்களப்பு)

கப்டன் சேரன் (ஈசன்) (நடராஜா சர்வேஸ்வரன் – யாழ்ப்பாணம்)

கப்டன் பிரதீபன் (கந்தசாமி மகிந்தன் – யாழ்ப்பாணம்)

கப்டன் சுதர்சன் (செல்லத்துரை ஜெயசீலன் – திருகோணமலை)

கப்டன் சத்தியன் (சிவஞானம் ரமேஸ் – முல்லைத்தீவு)

கப்டன் தமிழ்மறவன் (கல்கத்) (ஆறுமுகம் காண்டீபன் – முல்லைத்தீவு)

கப்டன் முகிலன் (வினோ) (சூரியகாந்தி சதாசிவம் – வவுனியா)

கப்டன் கதிர் (கீதன்) (இராமையா பாஸ்கரன் – திருகோணமலை)

கப்டன் மோகனரூபன் (சாந்தன்) (தங்கவேல் ராதாமோகன் – யாழ்ப்பாணம்)

கப்டன் செந்தூரன் (புலோமின்) (மரியாம்பிள்ளை கமிலன் – மன்னார்)

கப்டன் செம்பிறை (சௌமி) (வல்லிபுரம் நளினி – வவுனியா)

கப்டன் வினோதன் (நாகலிங்கம் உதயகுமார் – கிளிநொச்சி)

லெப்டினன்ட் சசிதரன் (வேலாயுதம் மகேந்திரன் – வவுனியா)

லெப்டினன்ட் மகேந்திரன் (மகேஸ்) (கந்தப்பிள்ளை விஜிதரன் – முல்லைத்தீவு)

லெப்டினன்ட் சீலன் (சலீம்) (தர்மகுலசிங்கம் சுந்தரராஜன் – முல்லைத்தீவு)

லெப்டினன்ட் சங்கர் (கனகரத்தினம் கனகலிங்கம் – வவுனியா)

லெப்டினன்ட் ஒப்பிலாமணி (சிவராஜ்) (அந்தோனிப்பிள்ளை செல்லத்துரை – புத்தளம்)

லெப்டினன்ட் செல்வன் (கனகரட்ணம் ஜீவரட்ணம் – அவிசாவளை)

லெப்டினன்ட் கில்மன் (கிருஸ்ணசாமி சின்னவன் – கண்டி)

லெப்டினன்ட் விந்தன் (கந்தையா சிவரூபன் – முல்லைத்தீவு)

லெப்டினன்ட் சிவனேசன் (ஆறுமுகம் பிரதீபன் – முல்லைத்தீவு)

லெப்டினன்ட் சிவம் (செல்வம் ரவி – மட்டக்களப்பு)

லெப்டினன்ட் உமா (அந்தோனிப்பிள்ளை தேவமேகன் – வவுனியா)

லெப்டினன்ட் குமணன் (செல்வரட்ணம் குணரட்ணம் – மன்னார்)

லெப்டினன்ட் தம்பித்துரை (தாசன் அன்ரன் – மன்னார்)

லெப்டினன்ட் சிவன் (பாக்கியராஜா மங்களேஸ்வரன் – மன்னார்)

லெப்டினன்ட் சிவானந்தன் (அந்தோனி யூட் – மன்னார்)

லெப்டினன்ட் தாரகா (இராமசாமி சந்திரா – வவுனியா)

லெப்டினன்ட் கார்வண்ணன் (ரகுநாதன்) (குணரட்ணம் குணராஜ் – யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் இளமுருகன் (ஐயாத்துரை அன்பழகன் – யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் ஈகவரசன் (தியாகு) (இராசேந்திரன் யோகநாதன் – யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் ஐயாத்துரை(நியூட்டன்) (வன்னியசிங்கம் விஜயகுமார் – யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் சந்திரன் (அருளப்பு பிலிப்சாள்ஸ் – முல்லைத்தீவு)

2ம் லெப்டினன்ட் திருவள்ளுவன் (ரகீம்) (சுப்பிரமணியம் கணேசமூர்த்தி – வவுனியா)

2ம் லெப்டினன்ட் நவீனன் (செல்வராசா செல்வேஸ்வரன் – முல்லைத்தீவு)

2ம் லெப்டினன்ட் மதியழகன் (பசுபதிப்பிள்ளை தயாரஞ்சீதன் – வவுனியா)

2ம் லெப்டினன்ட் நம்பியாண்டான் (செல்லத்துரை பிரபாகரன் – வவுனியா)

2ம் லெப்டினன்ட் அரவிந்தன் (செந்தமிழ்) (வெற்றிவேல் ஞானசேகரம் – வவுனியா)

2ம் லெப்டினன்ட் களப்பாடி (செல்லத்துரை புனிதகுமார் – கிளிநொச்சி)

2ம் லெப்டினன்ட் நீதிதேவன் (ஆணுப்பிள்ளை ரகு – மன்னார்)

2ம் லெப்டினன்ட் வேல்விழி (அபிசா) (சூசைகுருஸ் லெனிஸ்கொலஸ்ரிக்கா – மன்னார்)

2ம் லெப்டினன்ட் செல்வம் (தனா) (கிறிஸ்.ரீன் செல்வராணி – யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் சசி (சண்முகநாதன் வசந்தலாவேணி – கிளிநொச்சி)

2ம் லெப்டினன்ட் வாசுகி (குருசுமுத்து தேவதிரவியம் – கிளிநொச்சி)

2ம் லெப்டினன்ட் சீத்தாலட்சுமி (சுப்பன் முனியம்மா – முல்லைத்தீவு)

2ம் லெப்டினன்ட் காரணி (துரைச்சாமி லலிதாதேவி – மட்டக்களப்பு)

2ம் லெப்டினன்ட் மிதுலா (கணபதிப்பிள்ளை மாரிமுத்து – மட்டக்களப்பு)

2ம் லெப்டினன்ட் நரேந்தினி (அப்பாசாமி அன்னலட்சுமி – கிளிநொச்சி)

வீரவேங்கை வீரபாண்டியன் (கந்தசாமி இந்திரகுமார் – முல்லைத்தீவு)

வீரவேங்கை முருகவேல் (பெருமாள் கண்ணன் – கிளிநொச்சி)

வீரவேங்கை சுரேஸ்குமார் (கதிரேசு சசிக்குமார் – கிளிநொச்சி)

வீரவேங்கை செல்வநந்தினி (செல்வராசா சகுந்தலாதேவி – திருகோணமலை)

வீரவேங்கை வெங்கடேஸ்வரன் (வடிவேல் சிவகுமார் – யாழ்ப்பாணம்)

வீரவேங்கை கிட்ணகுமார் (செல்வராஜா சந்திரகுமார் – யாழ்ப்பாணம்)

வீரவேங்கை ஜெயமதி (கணபதிபிள்ளை சறோசா – கிளிநொச்சி)

வீரவேங்கை ஜெனார்த்தினி (சீனிவாசகம் குணவதி – யாழ்ப்பாணம்)

வீரவேங்கை தட்சாயினி (சங்கரப்பிள்ளை விக்கினேஸ்வரி – யாழ்ப்பாணம்)

வீரவேங்கை எழிலருவி (அருள்தாஸ் புஸ்பமலர் – கிளிநொச்சி)

வீரவேங்கை திருமலர் (யோகராசா கமலேஸ்வரி – திருகோணமலை)

வீரவேங்கை சுரபி (முத்துக்குமார் மோகனராணி – கிளிநொச்சி)

வீரவேங்கை துவாரகா (நல்லதம்பி கமலா – மட்டக்களப்பு)

வீரவேங்கை ரமணி (ஞானப்பிரகாசம் பெனடேற் – யாழ்ப்பாணம்)

வீரவேங்கை கவிமலர் (நல்லையா சத்தியகலா – கிளிநொச்சி)

வீரவேங்கை நவம் (முனீஸ்வரன் தவசீலன் – வவுனியா)

இதேநாள் அச்சுவேலி பகுதியூடாக முன்னகர முயன்ற படையினருடனான மோதலில்:

2ம் லெப்டினன்ட் இன்பன் (கிட்ணன் ரவிச்சந்திரன் – முல்லைத்தீவு)

2ம் லெப்டினன்ட் தமிழ்க்கொடி (சிவபாலன்) (பாலசிங்கம் (பக்கிரி) மகேந்திரன் – கண்டி)

வீரவேங்கை சதானந்தன் (சதா) (சின்னத்தம்பி சந்திரவடிவேல் – முல்லைத்தீவு)

வீரவேங்கை பானுதேவன் (முத்தையா சிவகுமார் – வவுனியா)

மட்டக்களப்பு மாவட்டம் மின்வெட்டிகங்கைப் பகுதியில் சிறிலங்கா படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில்

லெப்டினன்ட் புவனேசலிங்கம் (கணபதிப்பிள்ளை வன்னியசிங்கம் – மட்டக்களப்பு)

2ம் லெப்டினன்ட் ஜேசுதாஸ் (தாமோதரம்பிள்ளை நல்லதம்பி – மட்டக்களப்பு)

வீரவேங்கை மனோஜன் (சிவச்சந்திரன் யோகநாதன் – மட்டக்களப்பு)

ஆகிய போராளிகளும் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments