பெயர் – பேதுரு சகாயசீலி ஊர் – ஆட்காட்டிவெளி ,மன்னார் தமிழீழ விடுதலைப்பபுலிகளின் முதலாவது பெண் மாவீரர் .யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் இந்தியப்படையினருடனான முதல் மோதலின் போது விழுப்புண்ணடைந்த நிலையில் சயனைட் உட்கொண்டு வீரச்சாவடைந்தார். இவர் வீரச்சாவடைந்த நாள் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளாக நினைவு கொள்ளப்படுகிறது. தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் போக்கையே திசை மாற்றிய பெண் புலிகள் வரலாற்றின் தொடக்கப்புள்ளி . தழிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது மரபுவழி மகளிர் படையணிக்கு இவரது பெயர் சூட்டப்பட்டது