×

ஊர் நோக்கி – மீசாலை

ஈழமணித் திருநாட்டில் யாழ்ப்பாணத்திற்குக் கிழக்கே உள்ள தென்மராட்சியில் நடுநாயகமாக இருப்பது மீசாலை.

தமிழர்கள் வாழும் நிலப்பகுதிக்கு காரணப் பெயர்கள் இட்டு அந்த மண்ணின் சிறப்பை போற்றுவார்கள் உலகம் முழுவதும் தமிழர்கள் வாழ்ந்த அடையாளத்தை தக்க வைக்க தாம் வாழ்ந்த நிலத்த்தக்கு அடையாளமாக தமிழ் மொழிச் சிறப்புமிக்க பெயர்களை வைத்தார்கள். இன்று உலகம் முழுவதும்  இருந்ததற்கான ஆதாரமாக சொல் ஆய்வு மிக முக்கியமானது. அதில் ஊரின் பெயர்களின் ஆய்வு மிகத் தொடர்புடையது. ஆபிரிக்க நாடான கமரூன் பழங்குடி மக்கள் வாழ்வியலை ஆராயும் கானொளியில் அவர்கள் பேச்சு ஊரின் பெயர்கள் மலைகளுக்கு மண்ணுக்கு குறிப்பிடப்படும் பெயர்கள் தமிழ் மொழி தொடர்புடையதாகவும் தமிழ் மொழியாகவும் உள்ளது. அது தமிழின் புராதண தொடர்பையும் தமிழின் தொல்லியல் மரபியல் சான்றுகளை உலகுக்கு தருகிறது.  அந்த வகையில் இன்று யாழ் மாநகரின் மீசாலை பற்றி பார்ப்போம்.

மீசாலை

தென்மராட்சியில் மாம்பழம் என்றதும் எமக்கு நினைவுக்கு வருவது மீசாலை மாம்பழங்கள். தென்மராட்சி பிரதேசம் எங்கும் மாமரங்கள் பரந்து காணப்படுகின்ற போதிலும் மீசாலையிலேயே அதிக மாமரங்கள் இருப்பது கண்கூடு. மீசாலை என்ற பெயர் ‘மா -சோலை’ என்ற காரணப் பெயரின் திரிபே என்று முன்னோர்கள் சொல்லுவார்கள்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தெற்கு வடக்காகப் பிரிக்கப்பட்டிருந்த இவ்வூர்இ இப்பொழுது வடக்குஇ கிழக்குஇ மேற்காகப் பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கே கொடிகாமம் – திருவாரம் – மந்து விலையும், கிழக்கே அல்லாரையையும், தெற்கே சாவகச்சேரியையும், மேற்கே மட்டுவில் – சரசாலையையும் தனது அயற்கிராமமாகக் கொண்டுள்ளது. மீசாலை வடக்கில் கல்லடிவெட்டை, வேம்பிராய் என இரு சிற்றூர்கள் உண்டு. கல்லடி வெட்டை கல்நிலமாக உள்ளது. மீசாலை தென்கிழக்கில் கொக்கட்டியங்காடு என ஒரு பகுதி உண்டு. வரணி – சாவகச்சேரி டச்சு வீதி, புத்தூர் – மீசாலை வீதி, கண்டி – யாழ்ப்பாணம் நெடுஞ்சாலை, மீசாலை – கச்சாய் வீதி ஆகிய பெருந்தெருக்களாகும். இவைகளை இணைக்கும் பல குறுக்கு வீதிகளும் உள்ளன. சங்கிலியனின் ஆட்சிக்கும் மீசாலைக்கும் தொடர்பு இருப்பதாகக் கதைகள் உண்டு. அவை ஆய்வு செய்யப்படுகின்றன.

ஏறத்தாழ 1250 குடும்பங்களைக் கொண்ட இக்கிராமத்தில் 5000 மக்கள் வரை வாழ்கின்றனர். வீதிகளில் சுமைதாங்கியும் ஊரணிகளும் உண்டு. சுமை கூடியவர்கள் சுமைதாங்கியில் சுமையை இறக்கி ஆறுதலடைவார்கள். நீர்நிலை இல்லாதவர்கள் நீர் எடுக்க ஊரணியாகிய கிணறும் கால்நடைகள் நீர் அருந்தக் கேணி,  குளங்களும் உதவும். ஆங்கிலேயர் காலத்தில் அதிகாரிகள் வந்த குதிரைவண்டிகள் தங்கிய இடங்களும் சில சந்திப்புக்களும் உண்டு. முச்சந்தி வேம்பிராய்ச் சந்தி, கேணியடிச் சந்தி, வாகையடிச் சந்தி, ஐயா கடையடிச்சந்தி, அல்லாரைச் சந்தி, மீசாலைச் சந்தி ஆகியனவாகும். மீசாலை கிழக்கில் கொக்கட்டியங்காடு என ஒரு குறிச்சியும் உண்டு.

இது வசதிகள் குறைந்த கிராமமும் அல்ல, வசதி கூடிய நகரமும் அல்ல. உப தபாற்கந்தோர், சிறிய புகையிரத நிலையம், மையப் பகுதியில் மின்சாரம், பேரூந்து தரிப்பு நிலையங்கள் உண்டு. யாழ்ப்பாண – கண்டி வீதியால் பொதுவாக எல்லாப் பேரூந்துகளும் புத்தூர் – மீசாலை வீதியால் காலை மாலை மதியம் என பேரூந்துகள் ஓடும்.

மீசாலை என்பது மீன்சாலை குறுகி மீசாலை ஆனதென்றும் மாசாலை என்றதில் அரவு மகரத்தின் மேலேறிய மாற்றத்தால் மீசாலை என்று வந்ததென்றும் கதைகள் உண்டு. ஆதாரம் பெரிதாக ஒன்றுமில்லை. மீசாலை கிழக்கில் மீன்பிடித் தொழிலை மேற்கொள்பவர்கள் உண்டு. அக்கிராமத்தில் ஊர் மாமரங்கள் பல இருந்தன. பல மிக இனிப்பானவை. அந்த இடங்களில் இப்பொழுது கறுத்தைக் கொழும்பான், வெள்ளைக் கொழும்பான், அம்பலவி, விலாட், பாண்டி, கழகட்டி, செம்பாட்டான், நவக்கிரி, பச்சைத்தின்னி, சேலம் எனப் பல இனங்கள் வந்துள்ளன. இதில் செம்பாட்டான் மட்டுந்தான் பழைய ஊர்ப்பழத்தை நினைவுபடுத்தும். இதன் உருசி அலாதியானது. சிவப்புப்பழம், ஆனால் விதையில் வண்டிருக்கும். வெட்டும்போது வண்டு வெளிவரும். மற்றும் பலா, தென்னை, பனை, வாழை, முருங்கை, எலுமிச்சை, தோடை போன்றனவும் உண்டு.

யாழ்பாண இடப்பெயர்வுக்கு பின்னர் முகமாலை முன்னரங்காக விடுதலைப்புலிகள் வைத்திருந்தபோது மீசாலை  எப்போதும் அடிக்கடி செய்திகளில் உச்சரிக்கபடும் இடமாக இருந்தது.

பல மாவீரச் செல்வங்களையும் போராளிகளையும் பல போர்க்கால வரலாறுகளையும் தன்னகத்தே கொண்டுள்ள மீசாலை, என்றும் தாயக பற்றுடனும் தனியாத தாகத்துடனும் வீரத்தோடு வீற்றிருக்கின்றது.

வீரசிங்கம் சைவ வித்தியாசாலை

யாழ்ப்பாணக் குடாநட்டில் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கிறிஸ்தவ மிசனரிகள் தமது மதத்தினைப் பரப்பும் நோக்குடன் கிராமங்களில் ஆங்கிலப் பாடசாலைகள் நிறுவுவதை அவதானித்த வீரசிங்கம் என்னும் பெரியார், இத்தகைய சைவத் தமிழ்ப் பாடசாலை ஒன்று மீசாலையில் நிறுவப்பட்டால் சைவசமயத்தின் மீது பற்றுக்கொண்ட மீசாலையூர் மக்கள் மதம் மாறமாட்டார்கள் என எண்ணினார்.

வட்டக்கச்சி
வினோத்

 

guest
1 Comment
Inline Feedbacks
View all comments