
வடமாகாணம் கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச செயலகத்தக்கு உட்பட்ட பல புராதன தகவல்களை தன்னுள் புதைத்துக்கொண்டு மருதம் நிலம் செழித்திருக்கும் ஒரு கிராமம் பல்லவராயன்கட்டு.
பல்லவராயன் என்னும் மன்னன் பதினெட்டு தொழில்சார்ந்த தொழிலாளர்களுடன் பல்லவராயன்கட்டு பிரதேசத்தை ஆட்சி செய்தான். அவனது ஆட்சி எல்லையாக வடக்கே மண்டக்கல்லாறு, தெற்கே முழங்காவிலும், கிழக்கே வன்னேரியும், மேற்கே பொன்னாவெளியுமாக காணப்பட்டன. இவரது ஆட்சி காலத்தில் வடபகுதியான அரசபுரம் என்னும் நிலப்பரப்பை அல்லிராணி என்னும் அரசியும், மாந்தையெனும் நிலப்பரப்பை கரிகாலன் என்னும் சிற்றரசன் ஆட்சி புரிந்ததாக வரலாறுகள் மூலம் தெரியவருகின்றது.
உழவுத்தொழிலை முதன்மைபடுத்த அதுசார்ந்த மற்றைய பதினெட்டு தொழில்களை முதன்மையாகக் கொண்டு செழித்த ஆட்சி பல்லவராயன்கட்டில் நடந்துள்ளது. அதற்கு ஆதாரமாக அங்கு காணப்படும் ஒவ்வொரு தொழில் பெயரிலும் அப்பிரதேசத்தில் இன்னும் காணப்படும் குளங்கள் ஆதாரமாக இருக்கிறது:
கொள்ளங்குளம் இரும்புவேலைகாகாக
பத்தன்குளம் ஆபரண வேலைக்காக
நகபடுவான் குளம் விக்கிரகம் சிலை வேலைக்காக
கரியாலைக்குளம் குயவ வேலைக்காக
பண்டிவெட்டிக்குளம் வேட்டைத் தொழிலுக்கு
வில்வெட்டிக்குளம் வேடுவ தொழில் காவல் தொழிலுக்கு
தேவன் குளம் ஆலயப் பணிக்காக
வன்னேரிக்குளம் வாத்தியப் பணிக்காக
மண்ணியாக்குளம்
ஜயம்பெருமாள்குளம்
பூதவுடையார் புளியங்குளம்
கரம்பைகட்டுக்குளம்
வண்ணாம்புட்டிக்குளம்
நாச்சியார் குளம்
பன்னாமோட்டைக்குளம்
சின்னவன் முறிப்புக்குளம்
பல்லவராயன் கட்டுக்குளம்
ஒரு குறுகிய நிலப்பரப்பில் பல குளங்களை அமைத்து அதற்கு ஏற்ற பணிகளையும் அமைத்து பொருளாதார வளர்ச்சியும் மக்களின் தொழில் பாதுகாப்புக்குமான ஒரு அடித்தளத்தை அந்தக்காலத்துக்கு ஏற்றாப்போல் அமைத்து ஆட்சி நடைபெற்ற ஊரே பல்லவராயன்கட்டு.
ஆன்மீகச் சிறப்புபெற்றதும் சிற்ப மற்றும் கட்டடகலையில் சிறப்புபெற்று இருந்து பல்லவராயன்கட்டு காட்டுப்பிள்ளையார் ஆலயம் வன்னேரிக்குளம் ஜயனார் ஆலயம் சிறப்புபெற்ற ஆலயங்களாக பல்லவராயன் என்னும் மன்னனால் ஆதரிக்கப்பட்ட ஆலயங்கள் ஆகும். பின்னர் அன்னியப் படையெடுப்பில் இவைகள் சிதைவடைந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.
பல்லவராயன் மன்னனின் கோட்டையின் சிதைவுகள் சுண்ணாவில் பல்லவராயன்கட்டு முழங்காவில் பகுதிகளில் காணலாம்.
1948 ஆங்கிலேயர் இலங்கையை விட்டு போனபின்னர் பல்லவராயன்கட்டு ஒரு கிராம சங்கமாக செயற்பட்டு வந்தது. இதன் பிரதான காரியாலயம் மண்ணியா என்னும் பகுதியில் செயல்பட்டு வந்துள்ளது. பின்னர் 1960 குடியேற்றம் அதன் பின்னர் மக்கள் இடம் பெயர்வு தொடர்ந்து நடந்த போர் தாக்கம் என ஊரின் பெயர்கள் மற்றும் கிரம எல்லைகள் மாற்றம் பெற்றன.
பல்லவராயன் கட்டு பூர்வீக மக்களையும் தன்னை நம்பி வந்த ஊருக்குள்ளே புலம்பெயர்ந்த மக்களையும் தன்னகத்தே அரவணைத்துள்ள ஒரு கிராமமாகும். இருந்தாலும் தற்போது பல அடிப்படை வசதிகள் இல்லாத ஒரு கிராமமாக உள்ளது. போர்காலத்தில் பல மாவீரர்களையும் போராளிகளையும் தன்னுள் பல புற வரலாற்றை விதைத்துள்ள கிராமம் பல்லவராயன்கட்டு.
வட்டக்கச்சி
வினோத்
உசாத்துணை
பல்லவம் 02
இணையம்