×

ஊர் நோக்கி – பூநகரி

என்பது இலங்கையின் வடமாகாணத்தில் அமைந்துள்ள ஒரு பிரதேசமாகும். இது கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ளது. பூநகரி அதன் அழகிய இயற்கை சூழல் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட ஊராக காணப்படுகின்றது. இது ஈழப்போரின்போது போது ஒரு முக்கிய ராணுவ தளமாகவும் இருந்தது. பூநகரியின் மக்கள் பெரும்பாலும் விவசாயம் மற்றும் மீன்பிடியில் ஈடுபட்டுகிறார்கள்

பூநகரியின் வரலாற்று தகவல்கள் அதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகின்றன. இதோ சில முக்கிய அம்சங்கள்: பூநகரி பகுதியில் மனிதர்கள் பண்டைய காலங்களிலிருந்து வாழ்ந்துள்ளார்கள் என்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இந்த பகுதி பண்டைய அரசர்களின் கட்டுப்பாட்டில் இருந்ததாக கருதப்படுகிறது.

தொன்மங்களை சுமந்த நிலம்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் பொன்னாவெளி கிராம அலுவலர் பிரிவின்கீழ் அமைந்திருக்கிறது ஈழவூர் என்னும் பழம் பெரும் கிராமம்.

பெயருக்கு என்றால் போல் ஆதி இரும்புக்கால எச்சங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கின்ற நிலமாக அடையாளப் படுத்தப்படுகின்ற ஈழவூரில் அமைந்துள்ள வெள்ளிப்பள்ளத்து வீரகத்தி விநாயகர் ஆலயத்தின் பின்னுள்ள பகுதிகளில் வெளிவந்த தொல்லியல் எச்சங்களும், கிராஞ்சிப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கிணறும் வரலாற்றின் கதைகளை உறுதி செய்கின்றன. அத்தோடு சங்ககாலத்துப் புலவர் ஈழத்துப் பூதந்தேவனார் இங்கு வாழ்ந்ததாகவும் செவிவழிக்கதைகள் கூறுகின்றன.

இவ்வாறு, தொன்மையின் சுவடுகளை சுமந்திருக்கின்ற ஈழவூர் யாழ்ப்பாண இராசதானி காலத்தில் வெளிநாடு என்றும் அழைக்கப்பட்டது என்கின்றனர் வரலாற்று ஆசிரியர்கள்.

பூநகரி கோட்டை இது முதலில் போர்த்துகீசரால் கட்டப்பட்டு பின்னர் டச்சு மற்றும் பிரிட்டிஷ் ஆட்சி காலங்களில் திருத்தப்பட்டது. இந்த கோட்டை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளுக்கு சாட்சியமாக உள்ளது. உள்நாட்டு போர்களினால் பூநகரியின் மக்கள் அதிக அளவில் இடம்பெயர்ந்தனர். பலரும் தமது வாழ்விடங்களை இழந்தனர். போர் முடிவடைந்த பின்னர், மீண்டும் மக்கள் பழைய நிலையிற்குத் திரும்ப முயன்றுவருகின்றனர்.

இயற்கை அழகுகளாலும், வளமான இயற்கை வளங்களாலும் புகழ்பெற்றது. இதனால், விவசாயம் மற்றும் மீன்பிடி தொழில்கள் முக்கியமானதாகவுள்ளது மூவேந்தர் காலத் தொடர்பும் முதுமக்கள் வாழ்ந்த வரலாற்று மடிமங்களை புதைத்துப் பாதுகாக்கும் பூநகரி ஈழ வரலாற்றின் ஓர் கீழடி ஈழப் போரியலில் பூநகரி நில அமைப்பிலும் மக்களின் தியாகத்திலும் நிமிர்ந்து நிற்கிறது,அறிஞர்கள் மாவீரர்கள் போராளிகள் படைப்பாளிகள் என பலரை தமிழ் கூறும் நல் உலகுக்கு தந்த நன்னிலம் பூநகரி

வட்டக்கச்சி வினோத்

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments