×

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் (TRO)

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் (TRO)

01: இலங்கைதீவில் 1983 ஆம் ஆண்டு ஆடி மாதம் நடைபெற்ற தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பின் தொடர்ச்சின் பெருந்தொகையான தமிழர்கள் தாய் மண்ணில் இருந்து இடம்பெயர்ந்து இந்தியாவில் தஞ்சம் அடைந்தனர். அகதி முகாம்களில் தங்கியிருந்த தமிழர்களின் துன்ப துயரங்களை அறிந்த தமிழீழத் தேசியத்தலைவர் அவர்கள்; 1985ஆம் ஆண்டு இம் மக்களின் நலனுக்காக சேவைக் கட்டமைப்பாக தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தை உருவாக்கினார்

02: TRO ‘நிவாரணம், புனர்வாழ்வு, அபிவிருத்தி’ என்ற நோக்கங்களைக் கொண்டு; செயல்பட்டது.

03: ஆரம்பத்தில் தமிழ் நாட்டில் தங்கியிருந்த தமிழர்களின் நலனுக்காக செயல்பட்ட தமிழர் புனர்வாழ்வுக்கழகம் 1987 ஆம் ஆண்டிலிருந்து தமிழ் மண்ணில் செயல்பட ஆரம்பித்தது.

04: TRO தனது நோக்கங்களை அடைவதற்காக கிராமிய மட்டத்தில் ஏழு பேரைக் கொண்ட சமூக பொருளாதார அபிவிருத்தி குழுக்களை உருவாக்கியது. ஏழு பேரில் ஒருவர் தலைவராக செயல்பட்டார் இந்த ஏழு பேரும் வேறு விடயங்களுக்கு பொறுப்பாக இருந்து செயல்பட்டனர். அவையாவன வீடமைப்பு, கல்வி, சுகாதாரம், புனர்வாழ்வு, தொழில், விவசாயம், பொது விடயம் ஆகியவை ஆகும்

05: TRO கிராமிய அமைப்புகளான சமூக பொருளாதார அபிவிருத்தி குழுத் தலைவர்களை ஒருங்கிணைத்து பிரதேச ரீதியான உள்ளூர் அரசசார்பற்ற நிறுவனங்களை உருவாக்கியது. அரச சார்பற்ற நிறுவன அமைப்புகளை நெறிப்படுத்தும் வகையில் மாவட்ட மட்டத்திலான TROகிளை அமைப்புக்கள் உருவாக்கப்பட்டு மாவட்ட அமைப்புக்களை ஒருங்கிணைத்து தலைமை அமைப்பு செயல்பட்டது.

06: மக்களுக்கான சேவையில் பிரதேச அரச சார்பற்ற நிறுவனங்களை உருவாக்கியதோடு மாவட்ட ரீதியான மையக் கட்டமைப்புகளையும் பல அரச சார்பற்ற நிறுவனங்களையும் உருவாக்கி தாய் அமைப்பாக TRO செயல்பட்டது.

TRO, 30 ற்கும் மேற்பட்ட பிரதேச நிறுவனங்களையும்; 10 ற்கும் மேற்பட்ட மைய நிறுவனக் கட்டமைப்புக்களையும் உருவாக்கி நெறிபப்டுத்தியது.

.பிரதேச ரீதியான நிறுவனங்கள் பல அவற்றில் சில எடுத்துக்காட்டு முல்லைத்தீவு அகதிகள் புனர்வாழ்வு நிறுவனம், அக்கராயன் அபிவிருத்திநிறுவனம், பட்டிப்பளை அபிவிருத்தி புலனாயவு; நிறுவனம்வ, வுனியா அபிவிருத்தி புனர்வாழ்வு நிறுவனம்,; மாந்தை மேற்கு அபிவிருத்தி நிறுவனம் போன்றவையாகும்.

மைய நிறுவனங்கள்.

1 பெண்கள் அபிவிருத்திக்கான ‘உளைக்கும் மகளிர் அபிவிருத்தி நிறுவனம்’

2 வலுவிழந்தாருக்கு – வெண்புறா, வலுவிழந்தோர்  வழ்வு நிலையம்.

3 சிறுவர் தவறுக்கு – சிறுவர் பாதுகாப்பு நிலையம், சிறுவர் பராமரிப்பு இல்லங்கள்.

4 முதியோர்தவறுக்கான – முதியோர்  இல்லங்கள்

5 .முன்பள்ளி மேம்பாட்டிற்கு – முன்பள்ளி கல்வி மேம்பாட்டு நிலையம்

6  வலுவிழந்த சிறுவர்களுக்கு – இனிய வாழ்வு இல்லம் வாழ்வாம்.

7 மனிதவள மேம்பாட்டிற்கான – பல்துறை பயிற்சி நிலையம்.

8 சுகாதார மேம்பாட்டிற்கான – வைத்தியசாலை அபிவிருத்தி (சபை) நோயாளர் நலன்புரி சங்கம்.

9 தொழில் மேம்பாட்டிற்கான – சுயசார்பு தொழில் முயற்சி நிதியம், சமூக பொருளாதார அபிவிருத்தி வங்கி.

7. சமூக பொருளாதார அபிவிருத்தி மக்களுக்கான சேமிப்புகளை ஊக்குவிப்பதோடு மக்களின் மேம்பாட்டுக்கான பல சுயசார்பு கடன் திட்டடங்களையும் நடைமுறைப்படுத்தியது.

1 மாணவர்களுக்கான – ‘தாருகம்’ திட்டம்.

2 மகளிருக்கான – ‘மகளிர் மான்மியம்’ திட்டம்.

3 தொழில் முனைவோருக்கான – ‘உழைப்பின் ஊற்று.’

4 வலுவிளந்தோருக்கான – ‘வாழ்வின் வளம்.’

5 விவசாய மேம்பாட்டுக்கு – ‘தோட்டத் திட்டம்.;

08: TRO நடைமுறைப்படுத்திய முக்கிய திட்டங்கள்.

– இடம்பெயர்ந்தோர் பராமரிப்புத் திட்டம்

– துயர் துடைப்புத் திட்டம்
– விசேட வீடமைப்புத் திட்டம்

– துரித புனர்வாழ்வு அபிவிருத்தி வேலைத்திட்டம் (RRDSP)

– கல்விச் சேவைத் திட்டம்
– வன்னிச் சிறுவர் பட்டினிச்சாவு தவிரப்புத் திட்டம்
–  போசாக்கு புனர்வாழவு; த் திட்டம்Øசமூக வேலைத் திட்டம்
– சுகாதார விழிப்புணர்வு சேவைத் திட்டம்

– எழுச்சி உதயம்
– முன்பள்ளிக் கலைத்திட்டம்
– மர நடுகைதத் திட்டம்

09: TRO வின் தாய் மண்ணின் செயல்பாடுகளுக்கு ஒவ்வொரு நாட்டிலும் செயற்பட்ட  TRO கிளைகளும், உள்ளுர் மக்கள் அமைப்புகளும் மக்களும்
சரவ் தேச அரச சார்பற்ற நிறுவனங்களும் அரசு அமைப்புகளும் தமது பங்களிப்பை வழங்கினர்.

தமிழர் புனர்வாழ்வுக் கழகம்

Tsunami-Financial-Report

FOR IMMEDIATE RELEASE – TRO 19.11.08

 

[Best_Wordpress_Gallery id=”30″ gal_title=”தமிழர் புனர்வாழ்வுக் கழகம்”]