×

ஊர் நோக்கி – உடுத்துறை

உடுத்துறை

யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சி கிழக்கு பிரதேச நிர்வாக அலகுக்குள் உள்ளதும் யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடமராட்சிப் பிரிவில் அமைந்துள்ள ஒரு கிராமம் உடுத்துறையாகும்.

ஒரு சிறு பகுதி தவிர்ந்த குடாநாட்டின் கிழக்குக் கடற்கரை முழுவதையும் தன்னுள் அடக்கியுள்ள ஒடுங்கிய நீளமான வடிவில் அமைந்துள்ள கிராமமாகும். இக் கிழக்கு எல்லையில் இந்தியப் பெருங்கடல் உள்ளது.

மற்றும் யாழ்பாண மாவட்ட நிர்வாக எல்லையும் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற காவல்துறை நிர்வாக எல்லையும் கொண்ட ஓர் கிராமமாகும் .கடல் வளம் மற்றும் பெருந்தோட்ட செய்கை, விவசாயம் என நிலச் செழிப்பும் கலைச்செழிப்பும் பெற்று சிறந்து விளங்கும்.

உடுத்துறை போரினாலும் கடல் சீற்றத்தில் ஏற்பட்ட சுனாமி போரலையாலும் பெரும் பாதிப்பை சந்தித்தது. வீழ்ந்து விடாத பெரு வீரத்தின் விளைவில் எத்துயர் வந்தாலும் மீண்டும் மிடுக்கோடு எழுந்து நிற்கிறது உடுத்துறை, கண்டி யாழ்ப்பாண நெடுஞ்சாலையில் இயக்கச்சி சந்தியில் இருந்து நேரே குறுக்காக 6கி மீ தூரத்தில் அமைந்துள்ள உடுத்துறை இயக்கர், நாகர் காலத்து தொண்மையை கொண்ட ஊர்களில் ஒன்றாக திகழ்கிறது.

உடுத்துறையில் கி .பி 2ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட நாகபூமி தமிழி நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன, தமிழர் வரலாற்றில் மிகத் தொண்மையும் , ஈழ விடுதலைப் போராட்டத்தில் எண்ணற்ற தியாகங்களையும் கொண்ட உடுத்துறை மண்ணில் தியாகத்தின் சான்றாக மாவீரர் துயிலுமில்லமும் ஆழிப்பேரலையில் உயிர் நீர்த்தவர்களுக்காக ஆழிப்பேரலை நினைவிடமும் அமையப்பெற்ற ஒரு ஊராக உடுத்துறை விளங்குகிறது,

எண்ணற்ற படைப்பாளிகள், அறிஞர்கள், கலைஞர்கள்,மாவீரர்கள், போராளிகள் என பலரை தமிழுக்கு தந்து கடற்காற்றின் உப்போடும் தென்னை இளநீரோடும் நிலத்தடி நீரைபோல பெருங்கவலையோடும் தனக்குள் புதைத்து வைத்துள்ள தமிழின் தொண்மையோடும் மீண்டெழுந்துகொண்டு இருக்கிறது உடுத்துறை.

  • வட்டக்கச்சி வினோத்

யாழ். உடுத்துறை மாவீரர் துயிலுமில்லம்.

 

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments