வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் இலங்கையின் வடபகுதியான வன்னிப் பெருநிலப்பரப்பில் முல்லைத்தீவு மாவட்டத்தில் வற்றாப்பளை என்னும் கிராமத்தில் அமைந்துள்ள ஒரு கண்ணகி அம்மன் ஆலயமாகும். முள்ளியவளை, தண்ணீருற்று ஆகிய கிராமங்களை அயற்கிராமங்களாகக் கொண்டுள்ளதோடு நந்திக்கடலும், வயல்வெளிகளும், பாலைமரச் சோலையும் சூழ்ந்த பசுமையான சூழலில் இவ்வாலயம் அமைந்துள்ளது.
அடங்காப்பற்று என அழைக்கப்படும் இவ் வன்னிப் பிரதேசத்தை வன்னி மன்னர்கள் ஆட்சி செய்தபோது யாழ்ப்பாண மன்னர்கள், போர்த்துக்கேயர், ஒல்லாந்தார் போன்றோருக்கு கப்பம் செலுத்தினர். இவர்களின் பின் வருகைதந்த ஆங்கிலேயர்களை எதிர்க்குமளவிற்கு வீரம் கொண்டவர்களாகப் பிற்காலத்தில் விளங்கினர். இத்தகை வன்னி மன்னர்களால் பரிபாலிக்கப்பட்ட இவ்வாலயத்தை போர்த்துக்கேயர் காலத்தில், போர்த்துக்கேய தளபதியாகிய நெவில் என்பவன் அழிக்க முற்பட்ட போது ஆலயத்தில் நின்ற பன்னிச்சை மரம் தனது காய்களை வீசி ஆலயத்தை அழிக்க விடாது தடுத்தது. இவ்வற்புத வரலாற்றை ஆலயத்தில் இன்றும் படிக்கப்படும் பன்னிச்சை ஆடிய பாடற்சிந்து மூலம் அறிய முடிகிறது.
விசேட வழிபாடுகள்
வைகாசி விசாகப்பொங்கல் (தமிழ் மாதமுறைப்படி)
பங்குனித் திங்கள் (தமிழ் மாதமுறைப்படி) – 4
கார்த்திகைத் திங்கள் (தமிழ் மாதமுறைப்படி) – 4
நவராத்திரி
சிவராத்திரி
பங்குனி மாதக்கடைசியில் (தமிழ் மாதமுறைப்படி) நடைபெறும் மஞ்சம்
https://ta.m.wikipedia.org/wiki/வற்றாப்பளை_கண்ணகை_அம்மன்_கோயில்