
1803 ஆம் ஆண்டு மார்ச் 22 -ஆம் தேதி கண்டிக்குள் நுழைந்த பிரித்தானியப் படை
இலங்கையின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதியில் அமையப் பெற்றிருந்த சுதந்திரமான கண்டி அரசின் கடைசி மன்னன் விக்கிரம ராஜசிங்கன். சிங்களக் கோட்டை அரசின் மேலாண்மைக்கு உட்பட்ட சார்பு அரசாக கி.பி .15 -ஆம் நூற்றாண்டில் உருவான கண்டி அரசு, 16-17 ஆம் நூற்றாண்டுகளில் சுதந்திரத் தன்மையுடன் விளங்கியது.
1803 ஆம் ஆண்டு மார்ச் 22 -ஆம் தேதி கண்டிக்குள் நுழைந்த பிரித்தானியப் படை மீண்டும் 1815 பிப்ரவரி 10 ஆம் நாள் கண்டிக்குள் நுழைந்தது. 1815 மார்ச் 2ஆம் தேதி கண்டி ஒப்பந்தம் மூலம் கண்டி பிரிட்டானியருக்குக் கொடுக்கப்பட்டது. பிடிபட்ட விக்கிரம ராஜசிங்கன் தமிழகத்தில் வேலூர் கோட்டைக்கு அனுப்பப்பட்டு சிறிய உதவித் தொகையுடன் வாழ்ந்து, 1832 ஜனவரி 30 ஆம் நாள் இறந்தார்.