மனோரமா (26 வைகாசி 1937 – 10 ஐப்பசி2015) தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவார். நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் தனது திறனை வெளிப்படுத்திய இவர் 1500 திரைப்படங்களுக்கு மேல் நடித்தார். இவர் தமிழ்த் திரையுலகினராலும், தமிழ்த் திரைப்பட ரசிகர்களாலும் ‘ஆச்சி’ என அன்போடு அழைக்கப்பட்டார்.
இவர் தென்னிந்தியாவின் ஐந்து முதலமைச்சர்களுடன் நடித்த பெருமை கொண்டவர். கா. ந. அண்ணாதுரை, மு. கருணாநிதி இருவரும் நாடக மேடைகளில் மனோரமாவுடன் நடித்திருக்கிறார்கள். தவிர ஜெயலலிதா மற்றும் ம. கோ. இராமச்சந்திரன் இவருடன் தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும் என். டி. ராமராவ் தெலுங்கு படங்களில் இவருடன் நடித்திருக்கிறார்.
ஆரம்பகால வாழ்க்கை
மனோரமாவின் இயற்பெயர் கோபிசாந்தா. இவரது பெற்றோர் காசியப்பன் ‘கிளாக்குடையார்’ மற்றும் ராமாமிர்தம். ஆகியோருக்கு மகளாக பிறந்தார். மனோரமா தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ராஜமன்னார்குடியில் வசதியான குடும்பத்தில் பிறந்தார். தந்தை ஒரு சாலை ஒப்பந்தக்காரராகப் பணியாற்றியவர். தந்தை காசியப்பன் கிளாக்குடையார் மனோரமாவின் தாயாா் ராமாமிா்தம் அவா்களின் தங்கையை இரண்டாம் தாரமாகத் திருமணம் புரிந்ததால். இதனை அடுத்து கணவருடன் ஏற்பட்ட மனகசப்பால் புறக்கணிக்கப்பட்ட இராமாமிருதம் அம்மாள் மனோரமவை அழைத்து கொண்டு காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூர் என்ற ஊருக்கு குடிபெயர்ந்தார். மனோரமாவை ஆறாம் ஆம் வகுப்பு வரை படிக்கவைத்தார். குடும்ப வறுமையின் காரணமாக பள்ளி படிப்பை தொடரமுடியாத மனோரமா அங்குள்ள செட்டியார் வீடுகளில் வேலையாளியாக பணி செய்தும். அவர்கள் தாயாருடன் பலகார வியாபாரம் செய்து வாழ்க்கையைத் தொடங்கினார்கள். தனது பனிரெண்டாவது அகவையில் நடிப்புத் தொழிலில் இறங்கினார். “பள்ளத்தூர் பாப்பா” என சிறு வயதில் மனோரமாவை செல்லமாக அழைக்கப்பட்டார். நாடக இயக்குனர் திருவேங்கடம், ஆர்மோனியக் கலைஞர் தியாகராஜன் ஆகியோர் இவருக்கு “மனோரமா” எனப் பெயர் சூட்டினர்.
மறைவு
மனோரமா தனது 78 ஆவது அகவையில் 2015 அக்டோபர் 10 அன்று இரவு 11:00 மணியளவில் மாரடைப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் காலமானார்.
Source: Wikipedia