தளபதி ஒண்டிவீரன் பகடை, நெற்கட்டும்செவல் பாளையத்தின் அரசர் பூலித்தேவனிடம் ஒற்றர் படைத்தலைவராகவும் படைத்தளபதியாகவும் பணிபுரிந்தார். ஆர்காட்டு நவாபுக்கு எந்த கப்பமும் செலுத்த முடியாது என்று பூலித்தேவர் மறுத்துவிட்ட நிலையில், ஆங்கிலேயப்படையினரின் உதவியுடன் கர்னல் ஹெரான் 1755 ஆம் ஆண்டு ஒரு பெரும் படையை நடத்தி வந்து தென்மலையில் முகாமிட்டார். ஒற்றுப் பணியில் திறன் வாய்ந்த ஒண்டி வீரன், நவாப் மற்றும் ஆங்கிலேய கிழக்கிந்தியக் கும்பினியின் படை முகாமுக்குப் புறப்பட்டுச் சென்றார் . ஒண்டிவீரன் பகடை தம் உளவுப்பணியின் போது தமது கையை இழந்தார் .
ஒண்டிவீரன் பகடை, நெற்கட்டும்செவல், திருநெல்வேலி, களக்காடு,கங்கைகொண்டான், வாசுதேவநல்லூர், திருவில்லிபுத்தூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற போர்களில் பங்கேற்றார். கான்சாகிப் எனப்படும் யூசுப்கான் மற்றும் பிரிட்டிஷ் படையை எதிர்த்துப் போர் புரியும் போது 1767 இல் ஒண்டிவீரன் இறந்தார் என்றும் கருதப்படுகிறது .