×

மாவீரன் சுந்தரலிங்கம்

மாவீரன் சுந்தரலிங்கம் என்று வரலாற்றில் அறியப்படும் சுந்தலிங்கக் குடும்பனார் பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரரான வீரபாண்டிய கட்டபொம்பனின் தளபதிகளில் ஒருவர் ஆவார்.

இராமநாதபுரம் கோட்டையில் 1798 செப்டம்பர் 20 ஆம் நாள் வீரபாண்டிய கட்டபொம்மனும் இராமநாதபுரம் கலெக்டர்  காலின் ஜாக்சனும் சந்தித்தபோது, அச்சந்திப்பு கைகலப்பில் முடிந்தது. அதில் கும்பினிப் படையின் உதவிக் கட்டளைத் தளபதி கிளார்க் மற்றும் சில ஆங்கிலேயர்கள் கொல்லப்பட்டனர். கட்டபொம்மனும் அவருடன் வந்தவர்களும் பத்திரமாத் தப்பிச்சென்றனர்.

வீரபாண்டிய கட்டபொம்மனுடன் இருந்த சுந்தரலிங்கம் இந்நிகழ்வின் போது ஆங்கிலேயர்களைக் கொன்றதிலும் கட்டபொம்மனைப் பாதுகாத்ததிலும் முக்கிய பங்கு வகித்தார். 1799 செப்டம்பர் 5 ஆம் நாள், மேஜர் பானர்மேன் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை முற்றுகையிட்டுத் தாக்குதல் நடத்தினான். இப்போரின் போது வீரன் சுந்தரலிங்கம் கொல்லப்பட்டார் .

 

guest
1 Comment
Inline Feedbacks
View all comments