ஈழத்தின் வடக்கே முல்லையும் நெய்தலும் மருதமும் சேர்ந்து பல புராதண தொடர்புடைய முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒரு எழில் மிகு ஊரே முள்ளியவளை. அழகு செழித்த வயல்களும் சோலைகளும் நிறைந்த ஊரிலே புராதண கோவில்களும், தமிழரின் பாரம்பரிய கிராமியத் தெய்வ வழிபாடும், தமிழர் பாரம்பரிய கலைகளும் இன்னும் உயிர்ப்போடு இருக்கும் ஒரு அழகிய ஊரே முள்ளியவளை.
விடுதலைப் போராட்டத்தில் தங்கள் உயிரை தியாகம் செய்த வீரர்கள் விதைக்கப்பட்ட முள்ளியவளை துயிலும் இல்லத்தையும் தன்னகத்தே கொண்ட ஒரு புனித பூமியாகவும் முள்ளியவளை சிறப்புப் பெறுகிறது. முள்ளியவளை என்ற பெயர் வரக் காரணம் முன்னாளில் இங்கு முள்ளி மரங்கள் அதிகமாகக் காணப்பட்டதால் ஆகும் என்று ஒரு செவிவழிக்கதையும் உண்டு.
இங்கு உழவுத் தொழிலே மிக முக்கியமான தொழிலாகக் காணப்படுகின்றது. பாரம்பரிய கூத்துக்கலையை இன்றும் இங்குள்ள ஆலய பாடசாலை மேடைகளில் கண்டு மகிழலாம். எப்போதும் தமிழ் பற்றும் தாயக உணர்வோடு வாழும் மக்கள் வாழும் முள்ளியவளையாகும். போர்காலத்தில் போரியல் வாழ்வோடும் தியாகத்தோடும் வாழ்ந்த வாழ்கின்ற மண்ணே முள்ளியவளையாகும்.
பாடசாலைகள் இங்கு கல்விச் சேவை செய்து வருகிறது.
• முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரி
• முள்ளியவளை கலைமகள் வித்தியாலயம்
• முள்ளியவளை தமிழ் வித்தியாலயம்
• முள்ளியவளை றோ.க.த.க பாடசாலை
அதில் காட்டாவிநாயகர் ஆலயத்தில் ஆண்டுதோறும் வைகாசி விசாகத்தில் வருகின்ற பொங்கல் தினத்தன்று கடல் நீரில் விளக்கு எரிப்பது மிகவும் அற்புதமான காட்சியாகும். அதைக் காண்பதற்காகப் பல்வேறு இடங்களில் இருந்தும் மக்கள் வருவார்கள்.
இப்பிரதேசத்தை சேர்ந்த அறிஞர்கள் கலைஞர்கள் பலர் புகழ்பெற்றுள்ளனர். அவர்களில் சிலரே பின்வருமாறு
• அண்ணாவியார் சூ. பொன்னையா
• அண்ணாவியார் சுப்பையா
• முல்லை சகோதரிகள் புவனா இரத்தினசிங்கம்
• க. கனகசபை
• க. கந்தசாமி (சங்கர்)
• அருணா செல்லத்துரை
• என். எஸ். மணியம்
• சி. ச. அரியகுட்டிப்பிள்ளை
• முல்லைமணி கலாநிதி வே. சுப்பிரமணியம்
• சிவனேசன் வே. கந்தையா
• அரியான் பொய்கை கை. செல்லத்துரை
• கோ. குட்டித்தம்பி
• த. கைலாயபிள்ளை
• அ. பாலமனோகரன்
• முல்லையூரான் மு. சிவராசா
• கணுக்கேணியூர் ஐங்கரலிங்கன்
• இளைய அப்துல்லாஹ்
• பேராசிரியர் நா. சுப்பிரமணிய ஐயர்
• பேராசிரியர் ம. இரகுநாதன்
– வட்டக்கச்சி
– வினோத்