×

வெள்ளையத் தேவன் அல்லது பகதூர் வெள்ளை

வெள்ளையத் தேவன் அல்லது பகதூர் வெள்ளை, வீரபாண்டிய கட்டப்பொம்மனின் வீரம் செறிந்த தளபதிகளுள் ஒருவர் ஆவார். 1798 செப்டம்பர் 20 – அன்று வீரபாண்டிய கட்டபொம்மன் கலெக்டர் ஜாக்சனைச் சந்தித்தபோது, ஜாக்சன் கட்டபொம்மனை சிறை பிடிக்க முயன்றார். ஆங்கிலேயர்களைத் தாக்கிக் கோட்டையிலிருந்து வீரபாண்டிய கட்டபொம்மன் தப்பிச்சென்ற நிகழ்ச்சியின் போது வெள்ளையத் தேவனும் உடனிருந்தார்.

1799 செப்டம்பர் 5 அன்று விடியற்காலை மேஜர் பானர்மேன் பாஞ்சாலக்குறிச்சிக் கோட்டையை முற்றிகையிட்டுத் தாக்கினார். இப்போரில் முக்கியத் தளபதியாக வெள்ளையத்தேவன் பங்கேற்றார்.

தெற்கு வாயிலைத் தகர்த்து உள்ளே நுழைய முயன்ற படைத்தலைவன் காலின்ஸை வெள்ளையத்தேவன் தன் ஈட்டியால் குத்தக்கொன்றார்.

பழுதுபட்ட கோட்டை பாதுகாப்பற்றது என்பதால் கட்டபொம்மனும் மற்றவர்களும் இரவு தப்பிச்சென்றனர்.

படைத்தலைவன் காலின்ஸைக் கொன்ற வெள்ளையத்தேவனைப் பிடுத்துக் கொடுப்பவர்களுக்கு 1000 வெள்ளி பரிசு தரப்படும் என ஆங்கிலேயர்களால் அறிவிக்கப்பட்டது. வெள்ளையத்தேவனின் மாமனே அச்சிறு தொகைக்கு ஆசைப்பட்டு மருமகனை பிடித்துக்கொடுத்தான்.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments