×

சிவநகர், இரணைப்பாலை, புதுமாத்தளன், அம்பலவன் பொக்கணை..

சிவநகர், இரணைப்பாலை, புதுமாத்தளன், அம்பலவன் பொக்கணை, வலைஞர்மடம், மந்துவில் ஆகிய கிராமங்களுக்கு மத்தியில் அமைந்த பச்சை புல்மோட்டை என்ற சதுப்பு பிரதேசத்துடன் இணைந்த, தென்னைகள் நிறைந்த ஒரு சிறு கிராமம்.

🎯இதுதான் ஈழப்போரின் அத்திபாரம் ஆடிப்போன இடம்

🎯தமிழ் மக்களின் நம்பிக்கை தகர்ந்துபோன இடம்

🎯வீடுகள், மரங்கள் மட்டுமன்றி வெறும் மண் கூட பொஸ்பரஸில் எரிந்த இடம்

🎯சமர்களின் நாயகர்களின் இன்னுயிர்கள் காற்றுடன் கலந்த இடம்

🎯அண்ணளவாக 400இற்கு மேலான மாவீரர்கள் ஆகுதியாகி வீழ்ந்த இடம்

🎯2009/04/04 அன்று அதிகாலை வேளையில் முற்றாக அழிந்தது ஆனந்தபுரம் 🔥

🎯மறைந்து போனது விடியலின் ஒளிக்கீற்று ⚡

😔 ஆனந்தபுர வீதியில் போனாலே மனது கனத்து போகிறது

😑 மீளும் நினைவுகளால் நிறைந்து போகிறது

😓 விழிகளில் எமையறியாமலே நீரூறி போகிறது

மந்துவிலில் எழுந்து நிற்கும் போர் வெற்றி நினைவுத்தூபியின் பின்புறமாக ஆனந்தபுரம் இப்போதும் ஒரு மௌன சாட்சியாக இருந்துகொண்டு இருக்கிறது. ஆனந்தபுரத்தில் வளரும் புதிய தென்னைகளின் கீற்றுகளில் தவழ்ந்து வரும் தென்றல் காற்றிலே இப்போது கந்தக மணம் இல்லை. ஆனால், விதையாக வீழ்ந்தவர்களின் தாகங்கள் நிறைந்தே இருக்கிறது.

அவர்களது உயிர் மூச்சுக்கள் கலந்தே இருக்கிறது.

அமைதியாக சில நிமிடங்கள் அந்த மண்ணில் நின்று, எங்கள் நாயகர்களாக நாம் நேசித்த அந்த வீரமறவர்களை மனதிருத்தி, அங்கு வீசும் காற்றினை ஆழமாக சுவாசித்தால் அந்த ஆன்மாக்கள் பேசும்.

அது குருதி ஓடும் நரம்பில் ஆடும் உணர்வின் அனுபவம்,

யாரும் வெளியில் நின்று அறிய முடியா புதிய தரிசனம்… 🙏

படத்தில் – ஆனந்தபுரத்தில் கிருஸ்ணன் கோவிலுக்கு அண்மையாக, 2009இல் இதே நாட்களை அண்மித்து மருத்துவ பிரிவின் மருத்துவமனை இயங்கியபோது விமான தாக்குதலுக்கு இலக்காகி பல இன்னுயிர்கள் காற்றுடன் கலந்த ஓரிடம் (வீடு).

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments