1993 ஆம் ஆண்டின் தைமாதத்தில் ஒரு நாள். கொழும்பிலிருந்து யாழ் வந்திருந்த அங்கிலிக்கன் ஆயர் கென்னத் பெர்னான்டோ அவர்கள் தேசியத்தலைவரைச் சந்திக்கிறார்.
ஆயர்: அரசாங்கம் நல்லெண்ணம் காட்டவேண்டுமென்று கூறுகிறீர்கள், ஆனால் நீங்களே ஒரு நல்லெண்ண முயற்சியை மேற்கொண்டால் என்ன ?
தலைவர்: என்ன செய்யவேண்டும் சொல்லுங்கள் ?
ஆயர்: உங்கள் பாதுகாப்பிலுள்ள சில சிங்களப இராணுவக் கைதிகளை விடுதலை செய்வீர்களா ? அரசினதும் சிங்கள மக்களினதும் நல்லெண்ணத்தைப் பெற உதவும்.
தலைவர்: நாளைக்கே அந்தக் கைதிகளை விடுவிக்கிறேன். உங்களிடமே அவர்களை ஒப்படைக்கிறேன். நீங்கள் கொழும்பு செல்லும்போது அவர்களை அழைத்துச் செல்லுங்கள்.
ஆச்சரியத்தில் அதிர்ந்துபோன ஆயர், “உங்கள் கருணை உள்ளத்தைப் பாராட்டுகிறேன், இது சமாதானத்திற்குக் கிடைத்த வெற்றி” எனப் புளங்காகிதமடைந்தார். அதுமட்டுமின்றி; “சிங்கள தேசத்திலிருந்து சில புத்திசீவிகளையும், பௌத்தகுருமாரையும் அழைத்துவர விரும்புகிறேன், அனுமதிப்பீர்களா ?” என வினவினார் ஆயர். நிச்சயமாக, எமது சமாதானக் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கின்றன என்று சிரித்தபடி கூறினார் தலைவர்.
சந்திப்பு நிறைவடைந்து, கைதிகளும் விடுவிக்கப்பட்ட மறுநாளன்று, சிங்கள அரசின் இரண்டு விமானங்கள் மட்டுவில் மீது இராட்சதக் குண்டுகளைப் பொழிந்து தலைவரின் விட்டுகொடுப்பிற்கு “நன்றி” தெரிவித்துவிட்டுச் சென்றன.