
வெற்றிகளின் பின்னால் இருந்த பேராற்றல்…
இடிவிழுத்திப்போகும்
இச்செய்தி வருமென்றா
உன்னை வழியனுப்பி வைத்தோம்
போர் ஓய்ந்த நாளிலும்
எமக்கேன் இடி விழுகின்றது
குருதி நரம்புகள் உறைந்துபோக
நெஞ்சில் குத்தீட்டி ஏறுகின்றது
கேணல் ராயூ
குயிலலெனவும் இவன் குறிக்கப்பட்டான்
அதிகம் பேசாமல்
அதிகம் சிரியாமல்
அதிக அதிசயம் நிகழ்த்திய அதிசயன் .
தலைவருகில் தன்னை தயார்படுத்தியதால்
கதிரவன் ஒளிகசிந்து ஊறியகாளை
நுட்ப மதி நிறைந்த நுாதனன்.
விடுதலையன்றி வேறொன்று சிந்தியா விவேகன்.
புதிய அரும்புகள் முளைகொள்ள
நாற்றங்கால் போட்ட நாயகன்.
பெருவெற்றிகள் ஒவ்வொன்றின் பின்னாலும்
இந்தபுலிமகனின்பேராற்றலும் இருந்தது
பகை நெஞ்சேறிய குண்டுகள் ஒவ்வொன்றையும்
இவன் கைகள்தொட்டு நீவின
எல்லாவைற்றையும் நூக்கிவைத்துவிட்டு
இத்தனை அவசரமாய்
சாவு அள்ளிப்போதை தாங்கமுடியவில்லையே
ராயூ.
ஒரு களத்தில் நீ மடிந்திருக்கலாம்
நோய் தின்று போது தான் தாளமுடியவில்லை
அண்ணனைக் கூட மீண்டு தரிசிக்காமல்
அகல் விளக்கே அணைந்து விட்டாயே
நீ வளர்த்த பயிர்களைக் கொண்டே
நின் கனவை நனவாக்குவோம்
சோகம் கப்பிய முகத்தை துடைத்து விட்டு
உன் கனவை நனவாக்குவோம்
அது ஒன்றே உனக்கு காணிக்கை
என்றாலும் உன் பிரிவெனும் கொடுமை
நீண்டநாளிருக்கும் எம் நெஞ்சில் .
கவியாக்கம்:கவிஞர் புதுவை இரத்தினதுரை.
நன்றி – சூரியப்புதல்வர்கள் இதழ் (2003).
சீரியதலைவனின் சிந்தனையால் சிறுத்தைகள் படையணியின் தளபதியாய்