
தென்னாபிரிக்க அரசால் இந்தியாவிற்கு நாடுகடத்தப்பட்டு வழியில் பல இன்னல்களை அனுப்பவித்துத் தனது இன்னுயிரை ஈந்தூர் ஏ.நாராயணசாமி. கடும்குளிரில் நடுங்கிக்கொண்டே கப்பலில் பயணம் செய்ய நேர்ந்தது. இரண்டு மாத காலம் கப்பலில் பல கொடுமைகளுக்கு ஆளானதில் விளைவாக கப்பலிலேயே உயிர்நீத்தார். அவரைப்பற்றிக் காந்தியடிகள் பின்வருமாறு குறிப்பிட்டார்.
“எந்தப் பெரிய சத்தியாக்கிரகிக்கும் சூட்டமுடியாத புகழ்மாலை நாராயணசாமிக்குப் பொருந்தும். அவர் ஒரு பரிபூரண சத்தியாக்கிகப் போராளியாக உயிர்துறந்தார்.”