×

இம்ரான் பாண்டியன் படையணி

இம்ரான் பாண்டியன் படையணி தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டது.

தமிழீழ தேசியத் தலைவரின் தனிப்பட்ட பாதுகாப்புப் படையணி

1983 ஆம் ஆண்டில் தமிழீழ தேசியத் தலைவரின் தனிப்பட்ட பாதுகாப்புக்காக ஒரு திறமையான படையணி தேவைப்பட்டது. அந்தக் கால கட்டத்தில் தலைவருக்கு தமிழ்நாட்டிலிருந்து பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. எனினும், தலைவரின் தனிப்பட்ட பாதுகாப்புக்காக இம்ரானைத் தெரிந்தெடுத்து நியமித்திருந்தார். பின்னர் இம்ரான் சிகிச்சைக்காக தமிழ்நாடு சென்ற பின் தலைவர் தனது பாதுகாப்புப் படையணியின் தலைவராக இம்ரானின் நெருங்கிய நண்பனாகிய பாண்டியனையே தெரிந்தெடுத்தார். தலைவரின் பாதுகாப்புக்கான படையணியினரை இம்ரானும் பாண்டியனுமே தேர்ந்தெடுத்து படையணியில் சேர்த்து வந்தனர். அந்த அளவுக்கு தலைவருக்கு மிக விசுவாசமுள்ள பாதுகாப்பாளர்களாக இம்ரானும் பாண்டியனும் இருந்து வந்தனர்.

இந்திய இராணுவம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய கால கட்டத்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் பெரும் பின்னடைவுக்குள்ளானது. அப்போது யாழ்ப்பாணத்தின் விடுதலைப் புலிகள் படையணித் தலைவராக பாண்டியன் இருந்தார். இந்திய இராணுவத்தினரால் பாண்டியன் இருந்த இடம் சுற்றிவளைக்கப்பட்டபோது கைத்துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு பாண்டியன் வீரச்சாவை தழுவிக்கொண்டார். பாண்டியன் வீரச்சாவு அடைந்த பின்னர் யாழ்ப்பாணத்தின் விடுதலைப் புலிகள் படைத்தலைவராக இம்ரான் நியமிக்கப்பட்டார். இவரும் இந்திய இராணுவத்துடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவை தழுவிக்கொண்டார்.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments