
ஒரு காலை இழந்தபின்பும் தன்னால் களத்திலும் சாதிக்க முடியும் என்பதை நிருபித்துக்காட்டிய கிட்டண்ணா.
1989. மூன்றாம் மாதம் முதலாவது வாரம். அன்று அதிகாலை நாயாறு மற்றும் செம்மலை ஆகிய முகாம்களலிருந்து, எங்களது தலைவர் அவர்களை கைது செய்யும் முனைப்புடன், பாரியதொரு இராணுவ நடவடிக்கையை, இந்திய ஆக்கிரமிப்பு படைகளின் சீக்கியப்படையணிகளும்,கூர்க்காஸ் படையணிகளும் இணைந்து மணலாற்றுக்காட்டை முற்றுகையிட்டு, பாரிய எறிகணைத் தாக்குதால்களையும்,
உலங்குவானுர்தித் தாக்குதல்களையும் நடாத்தி, முன்னேற்ற முயற்சிகளை மேற்கொண்டது. முன்னேறிய இந்தியப்படைகளை வழிமறித்து, விடுதலைப் புலிவீரர்கள் கடுமையாகப் போரிட்டனர். இவ்வேளையில் தலைவர் அவர்கள் அருகில் நின்ற கிட்டண்ணா, களநிலவரங்களின் இக்கட்டான நிலையினை உணர்ந்து, தான் சண்டைக்களத்திற்க்குப் போகப்போறன் என தலைவர் அவர்களிடம் கேட்க, தலைவர் அவர்களோ மறுத்துவிட்டார். ஆனாலும் தலைவர் அவர்களிடம் தொடர்ச்சியாகக் கேட்டு சம்மதத்தைவாங்கினார்.
ஒரு காலை இழந்த கிட்டண்ணாவை சண்டைகளத்திற்க்கு தூக்கித்தான் செல்லவேண்டும். கிட்டண்ணாவைத் தூக்கிச் செல்ல இருந்த போராளிகளை அழைத்த தலைவர் அவர்கள் ,கிட்டண்ணாவை களத்திற்க்குக் கூட்டிச் செல்லுமாறு பணித்ததுடன் “கிட்டு கவனம்” என்பதையும் கூறி வழியனுப்பிவைத்தார் தலைவர் அவர்கள். கிட்டண்ணாவோ சண்டை நடைபெறும் இடத்திற்கு அண்மையாக தன்னைக் கொண்டுசெல்லும்படிபணித்து சண்டை நடைபெறும் இடத்திற்க்கு மிக அண்மையில் நின்று களத்தை வழிநடாத்தினார். களத்தில் நின்ற போராளிகளுக்கு கிட்டண்ணாவின் குரலை தொலை தொடர்பு சாதனத்தில் குரலை கேட்டவுடன் பாரிய சநதோசம்.
அத்துடன் ஒரு புதிய உத்வேகமும் மேலிட்டது. அதேநேரம் நாங்கள் வீரச்சாவடைந்த பின்னர் தான் காட்டிற்க்குள் இராணுவம் வரமுடியும் என்ற நிலையில் போராளிகள் கடுமையாகப்போரிட்டனர். களத்தை, களமுனையில் நின்று வழிநடாத்திய கமல் அவர்களைத் தொடர்புகொண்டு களத்தை வழிநடாத்தினார் கிட்டண்ணா. சண்டை உக்கிரமாக நடந்துகொண்டிருக்கும் போது வீராவேசத்துடன் போரிட்டு செவ்வனவே அணிகளை வழிநடாத்திய கமல் அவர்கள் வீரச்சாவடைய அரி அவர்களின் சண்டையிடும் திறன் அணியை வழி நடாத்திய விதம் இவைகளைக் கவனித்த கிட்டண்ணா கமல் அவர்களின் இடத்திற்க்கு அரி அவர்களை நியமித்தார்.
ஒருகட்டத்தில் அரி அவர்களின் தொடர்பும் இல்லாமல்போக அதாவது அரி அவர்கள் வீரச்சாவடைய தளபதி சொர்ணம் அவர்கள் கிட்டண்ணாவின் உறுதியான மிகவும் தெளிவான கட்டளையின் கீழ் அணிகளை ஒருங்கினைத்து தலைவர் அவரகளின் இடத்திற்க்கு இராணுவத்தை விடக்கூடாது என்ற நிலையில் வழிநடாத்தினார். அக்களத்தில் நின்ற ஒவ்வொரு விடுதலைப்புலி போராளியும் ஒர் அடி நிலமும் விடக்கூடாது என்ற நிலையில் மிகக்கடுமையாகப் போரிட்டனர். விடுதலைப்புலிகளின் மனவுறுதியையும் இவர்களின் தீரமிகு தாக்குதலுக்கு ஈடுகொடுக்கமுடியாத இந்திய ஆக்கிரமிப்பு படைகள் பாரிய இழப்புக்களுடன் தங்களது படையினரின் உடலங்களையும், ஆயுதங்களையும் விட்டுவிட்டு படை நடவடிக்கையிலிருந்து பின்வாங்கியது .
இப்பாரிய முறியடிப்புச் சமரில் வீரச்சாவடைந்த போராளிகளின் வித்துடல்களுடனும் கைப்பற்றப்பட்ட படைத்தளபாடங்களுடனும் விடுதலைப்புலிகள் தமது இருப்பிடங்களுக்குத் திரும்பினார்கள். இந்தச் சண்டையில் தனது ஐம்பதுகலிபர் கனரகத்துப்பாக்கியால் செறிவான மற்றும் பரவலான சூட்டைக் கொடுத்து களநிலவரத்தை விடுதலைப்புலிகளுக்குச் சாதகமாக்கியவர் குணா அவர்கள். (இவர் இரகசிய நடவடிக்கை ஒன்றில் இயக்க இரகசியம் வெளியே தெரியக்கூடாது என்பதற்காக தன்னிடம் உள்ள அனைத்து ஆதாரங்களையும் அழித்துவிட்டு தன்னையும் ஆகுதியாக்கினார். இவர் இக்கட்டான சூழ்நிலைகளில் மிகவும் உறுதியான முடிவெடுக்கும் ஒரு சிறந்த போராளியுமாவார்.) அந்த நேரத்தில் குறுகிய எண்ணிக்கையான போராளிகளுடன் பாரிய அளவில் வந்த இந்தியப்படைகளை, அதுவும் உலகின் மூன்றாவது வல்லரசுப் படைகளை வழிமறித்துத் தாக்கினார்கள் என்றால் அப்போராளிகளிடம் இருந்த மனோவலிமையும் தாங்கள் உயிருடன் இருக்கும் வரை தலைவர் அவர்களுக்கு எதுவும் நடக்கக்கூடாது என்பதுமே ஆகும். உண்மையில் தான் உயிருடன் உள்ளவரை அண்ணைக்கு ஒன்றும் நடக்கக்கூடாது என்று கிட்டண்ணா நினைத்தாரோ ….
இவ் வீரம் செறிந்த வழிமறிப்புத் தாக்குதலில் இறுதிவரை உறுதியுடன் போராடி வீரகாவியமானவர்களின் விபரம் வருமாறு…
மேஐர்..கமல்.
மேஐர்..அரி.
லெப்..குகேந்திரன்.
லெப் .மணியம்.
லெப் .கஸ்ரோ.
வீரவேங்கை. ஐஸரின்.
இக்களமுனையில் வீரத்துடன் போரிட்டு பின் பல்வேறு களமுனைகளில் வீரச்சாவடைந்த மாவீரர்களையும் இதேநாளில் நினைவுகூருகிறோம்.
அன்றைய களத்தில் நின்றவர்களுடன்.
எழுத்துருவாக்கம்…சு.குணா.
பிரபாகரனின் முதல் பெரும் தளபதி கேணல் கிட்டு..