சிவகங்கை பாளையத்தின் பெண்ணரசி வேலுநாச்சியாரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், அவரிடம் மிக்க விசுவாசம் கொண்டவரும், ஆங்கிலக் கிழக்கிந்தியக் கும்பினி ஆதிக்கத்திலுருந்து சிவகங்கையை மீட்க நடத்தப்பட்ட போரில், தன்னைத்தானே முதல் மனித வெடிகுண்டாகப் பயன்படுத்தி ஆங்கிலேயரின் ஆயுதக்கிடங்கை அழுத்தொழித்தவரும் (1780) வீரப்பெண் குயிலி ஆவார்.
வேலு நாச்சியார் உருவாக்கிய உடையாள் படைக்குக் குயிலி தலைமை ஏற்றார். வேலைநாச்சியாரின் மெய்காப்பாளராகவும் குயிலி விளங்கினார்.
(வீராங்கனையுமான வீரத்தாய் வேலுநாச்சியார் )
வேலுநாச்சியார் தாம் இழந்த பகுதிகளைத் திரும்பக் கைப்பற்றினார். ஆனால் சிவகங்கை தலைநகரம் மட்டும் ஆங்கிலேயர் பிடியிலிருந்து கோட்டைக்குள் நுழைய இயலாமல் கும்பினிப்படை பாதுகாத்தது . விஜயதசமி விழாவை முன்னிட்டு, சிறப்பு அனுமதியாகப் பெண்கள் மட்டும் கோட்டைக்குள் இருக்கும் இராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டபோது, உடையாள்படைப் பெண் போராளிகள் பக்தைகள் வடிவில் நுழைந்தனர்.
கோட்டைக்கு வெளியிலிருந்து மருது சகோகதரர்கள் தாக்குதலைத் தொடக்கியபோது, உடையாள்படை கோட்டைக்கு உள்ளேயே கும்பினிப் படையைத் தாக்கியது.
( மருது சகோதரர்களில் மூத்தவரான பெரியமருது அல்லது மருதுபாண்டியர் )
பெருமளவு வெடிமருந்தையும், ஆயுதங்களையும் குவித்திருந்த கும்பினியின் ஆயுதக்கிடங்குக்குள், தன் உடலில் எண்ணெயை ஊற்றித் தீ வைத்துக்கொண்ட குயிலி பாய்ந்தாள். வெடிமருந்துக் கிடங்கு வெடித்து சிதறியது. தன் உடலைத் தீக்கிரையாக்கிய குயிலி, வேலுநாச்சியாருக்கு வெற்றியைத்தேடித் தந்தாள். (கதைப்பாடல்)
விடுதலைப் போராட்ட வரலாறுகளில் முதல் மனித வெடிகுண்டு குயிலியே ஆவார்.