×

ஊர் நோக்கி – மாசார்

ஈழத்தின் வடக்கில் யாழ் மாவட்டத்திற்கும் கிளிநொச்சி மாவட்டத்தக்கும் இடையில் உள்ள கிளிநொச்சி மாவட்ட நிர்வாக எல்லைக்குட்பட்ட பச்சிளைப்பள்ளிபிரதேச செயலகத்தில் மாசார் ஒரு கிராமமாகும். மிகப் பழமையான புராதண தொடர்புடைய இக் கிராமம், இங்கோ ஆதியில் இருந்து வாழும் மக்களும் உடுத்துறை, வரணி, மருதங்கேணி, சரசாலை போன்ற இடங்களில் இருந்து பல தலைமுறைக்கு முன்வந்த மக்கள் இங்கு வசித்து வருகின்றனர்.

மாசார் என்பது மா என்னும் சொல், குதிரையை குறிப்பதாகவும் மாசார் என்பது குதிரை கட்டிப் பராமரிக்கும் இடம் என்பதால், அரசர் வழித் தொடர்புடையதாகவும் படை வீரர்கள், குதிரைப்படை வீரர்கள் செறிந்து இருந்த இடமாக வரலாற்றுக் காலத்தில் இருந்திருக்கிறது மாசார். இலங்கையை பொறுத்த வரை தமிழர் மரபுகள் தொல்லியல் சான்றுகள் பற்றிய ஆய்வுக்கு அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. காரணம் இங்கு இயற்றபட்ட கட்டுக்கதை வரலாறுகள் தவறு என நிரூபிக்கப்பட்டுவிடும் என்ற அச்சம் ஆட்சியாளர்களிடம் இன்னும் இனத்துவேசமாக பதிந்து கிடக்கிறது. பொது வாக ஆட்சியாளர்கள் என்று சொல்லிவிட முடியாது. தமிழர் சாராத அறிஞர்கள் மதவாதிகள் தொல்லியல்  அறிஞர்களுக்கு கூட இதே இன வாத மதவாத சிந்தனை புரையோடிக்கிடக்கிறது. அதன் மூலம் தமது பதவிகளையும் அவர்கள் காத்துக்கொள்கிறார்கள்.

மாசார் மக்கள் நெற் செய்கை மற்றும் மேட்டு நில பயிர் வளர்ப்பு பெருந்தோட்டப் பயிரான தென்னை மற்றும் கால்நடை வளர்ப்பு போன்ற தொழில்களில் தமக்கானவருமானத்தை ஈட்டி வருகின்றது மாசார் கிராமமும் மக்களும்.

மாசார் பிள்ளையார் கோவில்

பாணவில் பிள்ளையார்  கோவில்

கல்லடி வைரவர்

பாலையடி வைரவர்

வாணன் அம்மன் கோவில்

ஆகிய கிராமியத் தெய்வ வழிபாடும் தன் கலாச்சார விழுமியங்கலோடும் இன்றும் சிறந்து விளங்குகின்றது மாசார்.

மாசார் குளம்

ஏரிகாய் குளம்

மட்டிக் கோட்டைக் குளம்

அடம்பன் குளம்

வேலிக் குளம்

நுணுவில் குளம்

சல்லி வெட்டிக் குளம்

பாணாவில் குளம்

யாவில் குளம்

சின்ன அங்குவில் குளம்

கரை விளாங்குளம்

பெரிய அங்குவில் குளம்

போன்ற குளங்கள் மழைநீரை நீராதாரமாக கொண்டு இக் குளங்கள் நீரைத் தேக்கி, மாசாரின் மேட்டு நிலப் பயிர்செய்கைக்கு மிகவும் உறுதுணையாக உள்ளது. எமது முன்னோர்கள் தமது இயற்கை வளங்களை நம்பி அதில் இருந்து தமது வளங்களை பெருகினர்.  அது இன்னும் எமது பொருளாதார வளத்துக்கும் அடித்தளமாக உள்ளது. இதை மாசார் என்னும் ஒரு கிராமத்தில் சுற்றியிருக்கும் குளங்கள், வளங்கள் ஊடாக நாங்கள்  காணலாம்.

சுமார் 250 ஏக்கர் நெற் செய்கையும் 650 ஏக்கர் தென்னந் தோட்டங்களும் மாசாரில் உள்ளது. மாசார் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை  இப் பிரதேச மக்களுக்கு கல்வி ஒளியைக் கொடுத்து பல திறமையாளர்களை உருவாக்கியுள்ளது.

போர்காலத்திலும் தனது தியாகத்தில் இங்குள்ள தென்னை மரங்கள் போல உயர்ந்தே இருக்கிறது. மாவீரர்கள் போராளிகள் நாட்டு  பற்றாளர்கள் என போர்கால தியாகங்களை கொடுத்த மாசார் மண் ஈழ நாட்டில் தனக்கான தனித்தவத்தோடு சிறந்து விளங்குகிறது.

  • வட்டக்கச்சி
  • வினோத்
 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments