மலேசியாவில் அதிக எண்ணிக்கையிலான தமிழர்கள் உள்ளனர். தமிழர்கள் மட்டுமின்றி சீனர்களும் வந்து வழிபடக்கூடிய கோவிலாக உள்ளது. இந்தக் கோயில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரை அடுத்து 13 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. இங்குள்ள முருகப் பெருமான் சுப்பிரமணிய சுவாமி என்று அழைக்கப்படுகிறார்.
முருக சிலையின் உயரம் 42.7 மீட்டர் (140.09 அடி). உலகளவில் மலேசியாவை அடையாளம் காட்டும் விதமாக இந்த கோயில் அமைந்துள்ளது. இந்து மதத்திற்குரிய கோயிலாக இருந்தாலும் மதப்பாகுபாடின்றி அனைவரும் வந்து வணங்கும் கோயிலாக உள்ளது. பத்துமலைக் குகை முருகன் கோயில் தைப்பூச திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த கோயில் 1891ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டிருக்கிறது அப்போது இந்த முருகனைத் தரிசிக்க கரடுமுரடான பாதையில் செல்ல வேண்டியிருந்தது. அதன் பின்பு 1938 ஆம் ஆண்டில் இந்த மலைக் கோயிலுக்குச் செல்ல 272 படிக்கட்டுகளைக் கொண்ட மூன்று நடைபாதைகள் அமைக்கப்பட்டது. இதை தவிர தனியே இரயில் பாதை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது இவ்வழிகளைப் பயன்படுத்தி தரையிலிருந்து 400 அடி உயரத்தில் உள்ள கோவிலுக்குச் சென்று சுப்பிரமணிய சுவாமியான முருகப் பெருமானைத் தரிசித்து வரலாம். சுற்றுலாப் பயணிகள் பாத்து கேவ் என செல்லமாக அழைக்கின்றனர்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழர்கள் மலேசியாவில் கூலித் தொழிலாளர்களாக பணிசெய்து வந்தனர். அப்போது தொழிலாளர்களின் தலைவராக இருந்தவர் காயாரோகணம் பிள்ளை. இவரது முயற்சியால் கோலாலம்பூரில் 1873 மாரியம்மன் கோயில் கட்டப்பட்டது. ஒருநாள் கனவில் தோன்றிய அம்பிகை என் இளைய மகன் முருகனுக்கு அந்த மலைக் குகையில் கோயில் கட்ட உத்தரவிட்டார். இதையடுத்து காயாரோகணம் பிள்ளையின் மகனான தம்புசாமி பிள்ளை, கண்ணப்பதேவர் என்பவர் இணைந்து காடாகக் கிடந்த பத்துமலையில் 1888இல் வேல் ஒன்றிணை வைத்து வழிபடத் தொடங்கினார்.
இவ்விதம் வழிபாட்டுக்கு உரிய கோயிலாக மக்கள் மத்தியில் புகழ் பெற்றதும் பத்துமலை முருகன் கோயிலை அப்புறப்படுத்தும்படி, கோலாலம்பூர் ஆட்சியாளர் ஜோஸ் துரை கட்டளையிட்டார்.
ஆனால் பக்தர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றனர்.
https://www.google.com/amp/s/tamil.samayam.com/religion/temples/malaysia-batu-caves-sri-subramaniam-temple-history-and-significance/amp_articleshow/69929673.cms