சிவகங்கையில் காவல்துறையில் பணியாற்றிய முத்துக்குமார்- வள்ளிமயில் இணையரின் மகனாக 16.07.1947 இல் பிறந்தார்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்த இராசேந்திரன், இந்தி எதிர்ப்புப் போரில் தீவிரமாகப் பங்கேற்றார். 27.01.1965இல் பல்கலைக்கழக மாணவர்கள் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்தி எதிர்ப்பு முழக்கங்களுடன் சிதம்பரம் நோக்கி ஊர்வலமாகச் சென்றபோது வழிமறித்த காவல்துறை எவ்வித முன்னறிவிப்புமின்றி கண்மூடித்தனமாகச் சுட்டதில் நெற்றியில் குண்டு பாய்ந்து மண்ணில் சாய்ந்தார்.
அண்ணாமலைப் பல்கலைக் கழக வளாகத்தில் மாணவர்களின் பெருமுயற்சியால் அமைக்கப்பட்டுள்ள இராசேந்திரன் சிலை இன்றும் திசை காட்டிக் கொண்டிருக்கிறது.