ஒளிவீச்சு
ஒளிவீச்சு என்ற பிரிவு பல நேரடி சமர்களை படம் பிடித்து வெளியிட்டு வந்தது. உண்மையான காட்சிப் பதிவின் மூலம் பல ஆவணத் திரைப்படங்களை வெளியிட்டு வந்தது. இப்பிரிவில் இருந்த போராளிகள் சண்டை நடக்கும் பொழுது சக போராளிகளுடன் இணைந்து படப்பிடிப்பு செய்து வந்தவர்கள். இவர்களுள் இசைப்பிரியாவும் ஒருவர்.
ஒளிவீச்சு தமிழீழ விடுதலைப்புலிகளின் அமைப்பால் வெளியிடப்பட்ட தமிழீழத்தின் முதலாவது வீடியோ சஞ்சிகை ஆகும். இது நிதர்சனம் நிறுவனம் மூலம் மே 1993 இலிருந்து மாதாந்த ஒளிநாடா சஞ்சிகையாக வெளிவந்து கொண்டிருந்தது. 100 க்கு மேல் வெளியான இச் சஞ்சிகை சரியாக 75 நிமிடங்களைக் கொண்டது. சண்டைகள் நடக்கும் பொழுது போராளிகள், சக போராளிகளுடன் இணைந்து பல நேரடிச் சமர்களைப் படம் பிடித்து, உண்மையான காட்சிப் பதிவின் மூலம் பல ஆவணத் திரைப்படங்களை இச் சஞ்சிகையில் வெளியிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
முழு விபரங்களுக்கு கீழே அழுத்தவும்….PFD FILE