×

மதம்

மதம் என்பது கடவுளை அறிவதற்கான வழியில் மனித ஆன்மா கடந்து செல்லும் தெய்வீகத்தன்மை  அல்லது  புனிததன்மை  வழியாகும். மதங்கள் என்பது இருத்தலியல், தார்மீக மற்றும் ஆன்மீக வகை கேள்விகளின் கொள்கைகள், நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகளின் தொகுப்பால் ஆன கோட்பாடுகள். மனிதனை தெய்வங்களுடன் வலுவாக இணைக்கும் கோட்பாடு. கோயில், பூசாரி மற்றும் தியாகங்கள் (அல்லது பிரசாதம்) ஆகிய மூன்று கூறுகளைச் சுற்றி கட்டமைக்கப்பட்டன., அவை  புனிதமான கருத்தாக்கத்தின் வெளிப்பாடாகும் .

இன்று இலங்கையில் 4 மதங்கள் உள்ளன,

  • இந்து, பௌத்தம்,கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம்

மதத்தின் பங்கு

ஒருபுறம், ஒரு பொதுவான திட்டத்தின் அடிப்படையில் சமூகக் குழுவின் ஒருங்கிணைப்பு, மறுபுறம், துன்பத்தை சமாளிக்க விசுவாசத்தின் மூலம் ஒரு குறிப்பிட்ட அளவிலான ஆன்மீக திருப்தியை உருவாக்க அனுமதிக்கும் ஒரு மதிப்பீட்டு முறையை ஒருங்கிணைப்பதே மதத்தின் செயல்பாடு ஆகும். மகிழ்ச்சியை அடைய.

அனைத்து மதங்களும் அவற்றின் தளங்களையும் அஸ்திவாரங்களையும் புராணங்கள் என்று அழைக்கப்படும் வரலாற்றுக் கதைகளை  கொண்டுள்ளன , புராணம் என்பது வாழ்க்கையின் தோற்றம், அதன் நிலையை நியாயப்படுத்துதல் மற்றும் அதன் எதிர்காலத் திட்டத்தை விளக்கும் கதையாக புரிந்து கொள்ளப்படுகிறது.

எல்லா மதங்களும் நாம் யார், ஏன் உலகிற்கு வந்தோம் என்பதை விளக்க முயற்சிக்கும் பலவிதமான சிந்தனை நீரோட்டங்களில் நிலைத்திருக்கின்றன.

இந்து மதம்

இந்து மதம் பழமையான ஒழுங்கமைக்கப்பட்ட மதங்களில் ஒன்றாகும் – அதன் புனித எழுத்துக்கள் கி.மு. 1400 முதல் 1500 ஆண்டு காலக்கட்டத்திற்கு செல்லுகிறது. மில்லியன் கணக்கான தேவர்களைக் கொண்ட இது மிகவும் மாறுபட்ட மற்றும் சிக்கலான ஒரு மதமாகும். இந்துக்கள் பலவகையான அடிப்படை நம்பிக்கைகளைக் கொண்டுள்ளனர் மற்றும் பல பிரிவுகளில் உள்ளனர். இது உலகின் மூன்றாவது பெரிய மதமாக இருந்தாலும், இந்து மதம் முதன்மையாக இந்தியாவிலும் நேபாளத்திலும் மட்டுமே உள்ளது.

இந்து மதத்தின் முக்கிய நூல்களாக, வேதங்கள் (மிக முக்கியமானதாகக் கருதப்படுகின்றன), உபநிடதங்கள், மகாபாரதம் மற்றும் ராமாயணம். இந்த எழுத்துக்களில் பாடல்கள், மந்திரங்கள், தத்துவங்கள், சடங்குகள், கவிதைகள் மற்றும் கதைகள் உள்ளன, அவற்றிலிருந்துதான் இந்துக்கள் தங்கள் நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டுள்ளனர்.

330 மில்லியன் கடவுள்களை கொண்டுள்ளதாக கூறப்படும் இந்து மதம் பலதெய்வ நம்பிக்கை உள்ளதாக பெரும்பாலும் புரிந்து கொள்ளப்பட்டாலும், அதற்கு ஒரு “கடவுள்” உன்னதமான-பிரம்மா உள்ளதாக கூறுகிறார்கள். பிரம்மா என்பது பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள யதார்த்தம் மற்றும் இருப்பு ஆகியவற்றின் ஒவ்வொரு பகுதியிலும் வசிப்பதாக நம்பப்படுகிறது. பிரம்மா ஆள்தன்மையற்றவர் மற்றும் அறியப்படாதவர் மற்றும் பெரும்பாலும் மூன்று தனித்தனி வடிவங்களில் இருப்பதாக நம்பப்படுகிறது: பிரம்மா – படைப்பாளர்; விஷ்ணு-பாதுகாப்பவர்; மற்றும் சிவா – அழிப்பவர். பிரம்மாவின் இந்த “அம்சங்கள்” ஒவ்வொன்றின் பல அவதாரங்கள் மூலமாகவும் அறியப்படுகின்றன.

பெண் தெய்வங்கள்

தெய்வங்களில் பெண்தெய்வங்களே மிகுதி என்பதால் பெண்தெய்வங்கள் முதன்மை நிலையில் வைத்து விளக்கப்படுகின்றன.

இனக்குழுச் சமுதாயத்தின் தொடக்கக் காலந்தொட்டுச் செழுமையின் அடையாளமாகவும் வலிமையின் குறியீடாகவும் பெண் கருதப்பட்டதால் பெண் வணங்குதற்கும் வழிபாட்டிற்கும் உரியவளானாள். பண்டைத் தமிழ் இலக்கியங்களில் பெண் தெய்வப் பெயர்களும் பெண் தெய்வ வழிபாடுகள் பற்றிய குறிப்புகளும் நிறைந்து காணப்படுகின்றன

பெண் தெய்வங்கள் இருவகை படும்,

  • தாய்த் தெய்வங்கள்
  • கன்னித் தெய்வங்கள்

மனித உயிர்கள் அனைத்தையும் பெற்றெடுத்தவள் என்ற அடிப்படையில் தாயாகவும், என்றும் மாறாத, அழியாத கன்னித் தன்மையுடையவள் என்ற அடிப்படையில் கன்னியாகவும் பெண் தெய்வங்களை வழிபடும் மரபு காணப்படுகிறது. உலகின் பல்வேறு நாடுகளிலும் கூட இம்மரபு இருந்து வருவது குறிப்பிடத் தக்கதாகும்.

தாய்த் தெய்வ வழிபாடு

‘அம்மன்’ என்ற பொதுப் பெயரால் அழைக்கப்படும் பெண் தெய்வங்கள், பெண்மை மற்றும் தாய்மைக் குணங்களை ஒருசேரப் பெற்றவையாக விளங்குகின்றன. தொடக்கக் காலத்தில் வளமை தொடர்பான சடங்குகள் பெண்களைக் கொண்டே மேற்கொள்ளப்பட்டதால் பின்னாளில் பெண்களே வளமையின் குறியீடாகக் கருதி வழிபடப் பட்டனர். இதுவே, தாய்த் தெய்வ வழிபாடு தோன்றி வளர்வதற்குக் காரணமாய் அமைந்தது.

‘மழையாகப் பொழிந்து மண்ணுயிர்களைக் காப்பவள் மாரியம்மா; நதியாக ஓடி நஞ்சை புஞ்சைகளைக் காப்பவள் கங்கையம்மா; தீமைகள் அண்டாதவாறு காப்பவள் எல்லையம்மா’ என்று, பெண் தெய்வங்கள் வளமையை மையமிட்டே வணங்கப் பட்டன; வழிபடப் பட்டும் வருகின்றன. காவிரி, கங்கை, யமுனை, சரசுவதி போன்ற பெரு நதிகளைப் பெண் தெய்வங்களாகவும் தாய்த் தெய்வங்களாகவும் வழிபடுவது இந்திய மரபாகும்.

நாட்டுப்புறச் சிறுதெய்வங்களாக மாரியம்மன், காளியம்மன், முத்தாலம்மன், சீலைக்காரியம்மன், திரௌபதையம்மன், நாச்சியம்மன், பேச்சியம்மன், கண்டியம்மன், வீருசின்னம்மாள், உச்சிமாகாளி, மந்தையம்மன், சோலையம்மன், ராக்காச்சி, எல்லையம்மன், அங்காளம்மன், பேச்சி, இசக்கி, பேராச்சி, ஜக்கம்மா போன்ற பெண் தெய்வங்கள் வணங்கப்பட்டு வருகின்றன. நன்மை அளிக்கும் தெய்வங்கள், தீமை அளிக்கும் தெய்வங்கள் என்று கூட இவற்றை வகைப்படுத்துவதுண்டு. சக்தியின் அவதாரமாக, வடிவமாகப் பெண் தெய்வங்கள் கருதப்பட்டு வணங்கப் படுகின்றன.

கன்னித் தெய்வ வழிபாடு

கன்னித் தெய்வ வழிபாடு பெரும்பான்மையும் சிறுதெய்வ வழிபாடே ஆகும். கன்னி என்ற சொல்லிற்குப் ‘பூப்படைந்து திருமணமாகாத, கன்னித் தன்மை இழக்காத பெண்’ என்று அகராதி பொருள் கூறுகிறது. இயல்பாகவோ அல்லது கொலை செய்யப்பட்டோ இறக்கும் பெண்களைக் கன்னித் தெய்வமாக வழிபடும் மரபு தமிழகத்தில் பரவலாகக் காணப்படுகிறது. இறந்த கன்னிப் பெண், தன் வீட்டாருக்கு வளமையும் பாதுகாப்பும் அளிப்பதாகவும், அவள் கன்னிப் பெண்கள் மீது இறங்கி அருள்வாக்குச் சொல்வதாகவும் நம்பப்படுகிறது.

வீட்டுத் தெய்வமாக, குலதெய்வமாக, கன்னித் தெய்வங்களே வழிபடப்படுவது இங்குக் குறிப்பிடத்தக்கதாகும்.

ஏழு கன்னிமார்

கன்னித் தெய்வங்கள் ஏழு என்று குறிப்பிடும் வழக்கம் காணப்படுகிறது. ஏழு கன்னிமார், சப்த கன்னியர், ஏழு கன்னித் தெய்வங்கள் என்று இதனைக் கூறுவதுண்டு. ஏழு கன்னித் தேவதைகள் வானத்திலிருந்து இறங்கி வந்து, நீராடிக் களிப்பது, துன்பப் படுவோர்க்கு உதவுவது போன்ற கதைகள் பரவலாக உள்ளன. வனப் பகுதிகளிலும் மலையை ஒட்டிய பகுதிகளிலும் திறந்த வெளியில் கன்னித் தெய்வக் கோயில்கள் இருக்கின்றன. இவற்றை வன தேவதைகளாகக் கொண்டு வனத்தில் வழிபடும் வழக்கமும் காணப்படுகிறது. ஒரே கல்லில் ஏழு பெண் உருவங்கள் வடிவமைக்கப் பட்டு வழிபடப் படுகிறது. இத்தெய்வங்களுக்கு என்று தனித்த வழிபாட்டு முறைகள் இல்லை. பிற தெய்வங்களுடன் இணைத்தே வழிபடப் படுகின்றன.

ஆண் தெய்வ வழிபாடு

தெய்வங்களில் பெண் தெய்வங்களை நோக்க ஆண் தெய்வங்கள் குறைவு என்றுதான் கூற வேண்டும். பெண் தெய்வங்கள் பல்வேறு சக்திகளைத் தங்கள் வசம் வைத்திருப்பதாகவும் ஆண் தெய்வங்கள் குறைந்த சக்தி உடையவையாகவும் நம்பப்படுவதே இதற்குக் காரணம் எனலாம். ‘சக்தி இருந்தா வேலையைச் செய், இல்லையென்றால் சிவனேன்னு கிட’ என்ற பழமொழியைக் கேட்டிருப்பீர்கள். இது பெண் தெய்வங்களைச் சிறப்பிக்கவே உருவாக்கப் பட்டதாகும்.

ஆண் தெய்வங்களில் சில முதன்மைத் தெய்வங்களாகவும் பல முதன்மைத் தெய்வங்களுக்குத் துணைமைத் தெய்வங்களாகவும் விளங்குகின்றன. துணைமைத் தெய்வங்களைப் ‘பரிவாரத் தெய்வங்கள்’ என்றும் கூறுவதுண்டு.

முதன்மைத் தெய்வங்கள்

தனித்த கோயில்களையும் வழிபாட்டு முறைகளையும் தன்னகத்தே கொண்ட தெய்வங்களே இங்கு முதன்மைத் தெய்வங்கள் என்ற நிலையில் விளக்கப்படுகின்றன. இவை ஊர்த் தெய்வங்களாகவோ, காவல் தெய்வங்களாகவோ வழிபடப்படும்.

தமிழகத்தில் பரவலாக அய்யனார் வழிபாடும், தென் தமிழகப் பகுதியில் சுடலை மாடன் வழிபாடும், கொங்கு மண்டலப் பகுதியில் அண்ணன்மார் சாமி வழிபாடும் சிறப்பாகக் காணப்படுகின்றன. அந்தந்தப் பகுதி மக்களின் வழிபாட்டு முறைகளுக்கு ஏற்ப ஆண்டு தோறும் விழா எடுக்கப்பட்டு வழிபடப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு தெய்வத்திற்கும் என்று தனித்த வழிபாட்டு முறைகள் உள்ளன. மேற்கூறிய தெய்வங்களுக்கு அடுத்த நிலையில் மதுரை வீரன், கருப்ப சாமி, முனீஸ்வரன் போன்ற தெய்வங்கள் வழிபடப்படுகின்றன. சில கிராமங்களில் இத்தெய்வங்களுக்குச் சிறப்பான முறையில் வழிபாடு நிகழ்த்தப் படுவதுண்டு. முதன்மைத் தெய்வங்களோடு இணைத்தும் இவை வழிபடப்படுவதுண்டு.

Reference

http://www.tamilvu.org/courses/degree/a061/a0614/html/a0614224.htm

 

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments