×

தமிழீழ நீதி நிர்வாகத்தின் சட்டச் செயலகம் திறப்பு நிகழ்வு.

தமிழீழத்தின் நீதித்துறை நிர்வாகச் சட்டச் செயலகத்தின் திறப்பு நிகழ்வு 26.07.2005, அன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. தமிழீழத்தின் துயிலும் இல்லப் பொறுப்பாளர் திரு.பொன் தியாகம் அவர்களால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. தமிழீழக் காவல்துறை பொறுப்பாளர் தமிழீழத் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். சட்டப் பேரவையின் பெயர்ப் பலகையை விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த உறுப்பினர் திரு.பாலகுமார் திறந்து வைத்தார்.

சட்டச் செயலகக் கட்டிடம் தமிழீழ அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் திரு.எஸ்.பி.தமிழ்ச்செல்வன் அவர்களாலும், சட்ட நூலகத்தை கலாநிதி திரு. நித்தியானந்தன் அவர்களாலும் உத்தியோகபூர்வமாகத் திறந்துவைக்கப்பட்டது. மன்னார் மற்றும் முல்லைத்தீவைச் சேர்ந்த தமிழீழத்தின் சட்டத்தரணிகள் , நீதியரசர்கள்,   வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்தில் இருந்து ஓய்வுபெற்ற நீதிபதிகள் எனப் பலர் கலந்துகொண்டிருந்தனர். இந்நிகழ்வில் மன்னார் பாராளுமன்ற உறுப்பினர் திரு.செல்வம் அடைக்கலநாதனும் கலந்துகொண்டார். திடீர் மரண விசாரணை அதிகாரிகளும் மற்றும் அனைத்து சமாதான நீதிவான்களும் இந் நிகழ்வுக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள்.

அதனைத் தொடர்ந்து,  அலங்கரிக்கப்பட்ட பந்தலில் நீதித்துறைப் பொறுப்பாளர் திரு.பரராஐசிங்கம் அவர்களின் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சட்டத்தரணிகள் சிலர் கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னர் பாரம்பரிய பொதுச்சுடர் ஏற்றி வைக்க அழைக்கப்பட்டனர்.

தமிழீழத்தின் நீதித்துறை நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களைத் தெளிவாக வெளிப்படுத்த திரு.நடேசன் அவர்கள் உரை நிகழ்த்த அழைக்கப்பட்டார். மேலும், சட்டச் செயலகத்திற்கான கட்டிட நிர்மாணமானது, தமிழர்களின் சுதந்திரப் போராட்ட முயற்சிகளின் பாதையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைச் சுட்டிக்காட்டும் ஒரு மைல் கல்லாகும். இந்த கட்டிடம் கூட ஒரு நலன் விரும்பி டாக்டர் திரு நித்தியானந்தன் அவர்களால் நிதியளிக்கப்பட்டது.

பின்னர், கூட்டத்தின் சிறப்பு அழைப்பாளராக அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் திரு.எஸ்.பி.தமிழ்ச்செல்வன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்த அழைக்கப்பட்டார். அவர் தமிழீழத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலையை வெளிப்படையாக வெளிப்படுத்தினார். மற்றும் அரசாங்கங்கள் தொடர்ந்தும் ஏமாற்றும் வேலைகளைச்  செய்து வருகின்றது  என்றும் குறிப்பிட்டார்

இறுதியாக சட்டத்துறை செயலகத் துணைப்பொறுப்பாளர் திரு.இளங்கதிர் நன்றியுரை ஆற்றினார்.

தமிழீழத்தின் நீதித்துறை நிர்வாகப் பிரிவான நாங்கள், தமிழீழ மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் நீதித்துறையை உயர்த்துவதற்கு உதவுவதற்கு நிதி ரீதியாகவோ அல்லது பொருளாகவோ உலகெங்கிலும் உள்ள நலன் விரும்பிகளின் உதவியை நாடுகின்றோம்.

எமது சட்டக் கல்லூரியின் சட்ட மாணவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு விசேடமாக சர்வதேச தரநிலைகள் தொடர்பான சட்டப் புத்தகங்கள் அவசரமாகத் தேவைப்படுகின்றன.

விருப்பமுள்ளவர்கள் பின்வரும் முகவரியில் தொடர்பு கொள்ளவும்:-

மின் அஞ்சல் : para@eelamjudicial.org/  lawcollege@eelamjudicial.org

தொலைபேசி : +94-21-228-5055

தொலை நகல் : +94-21-228-5055

அனைவருக்கும்  நன்றி

இதயம் நிறைந்த அன்புடன்

நீதி நிர்வாகச் சட்டச் செயலகம்.

 

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments