மாவட்ட ரீதியாக உள்ள விளையாட்டுத்துறை பொறுப்பாளர்கள் ஊடாகவே மாவட்டத்திற்கான விளையாட்டு நிகழ்வுகள் நடைமுறைப்படுத்தப்படும். தொடக்க நிலையாக ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பிரதேச சபை மட்டத்தில் 7 பேர் கொண்ட விளையாட்டு ஒருங்கமைப்பு குழுவின் வழிநடத்தலில் அப்பிரதேசத்திற்கான விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெறும்.
பிரதேச விளையாட்டு நிகழ்வுகளின் பயனாகவே பிரதேச விளையாட்டு அணிகள் உருவாக்கப்படும். இவர்களைக் கொண்டு அம்மாவட்டத்திற்கான விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெறும். மாவட்ட நிகழ்வுகழுக்குப் பொறுப்பாக மாவட்ட பொறுப்பாளர்களின் வழிநடத்தலில், மாவட்ட ஒருங்கமைப்புக் குழு ஒன்று இயங்கும். அவர்களே விளையாட்டுக்களுக்குப் பொறுப்பானவர்கள். ஒவ்வொரு பிரதேச சபை ஒருங்கமைப்புக் குழுவிலிருந்தும் அங்கத்துவம் பெறும் உறுப்பினர்களைக் கொண்டே மாவட்ட ஒருங்கினைப்புக் குழு உருவாக்கப்படும். இன்நிலை வரை மாவட்டத்திற்கான விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெறும். இதன் பின் தேசிய நிலை விளையாட்டுக்கள் இடம்பெறும். தேசிய நிலைக்கு முன் மாவட்டக் குழுக்கழுக்குத் தேவையான பயிற்சி முகாம்கள், வுpரிவுரைகள் யாவும் மாவட்ட ரீதியில் இடம்பெறும்.
தேசியமட்ட விளையாட்டுக்கள்
மாவட்ட விளையாட்டு குழுக்களின் உறுப்பினர்களைக் கொண்டு தேசிய விளையாட்டு ஒருங்கமைப்புக் குழு ஒன்று அமைக்கப்படும். இக்குழு தேசிய விளையாட்டு நிகழ்வுகளைத் திட்டமிட்டு செயல்படுத்தும் பொறுப்புக்களைக் கொண்டிருக்கும். அத்தோடு பிற வேலைத் திட்டங்களையும் ஒழுங்குசெய்து கவனிக்கும். இவற்றையெல்லாம் கண்காணிக்கவும், ஏற்ற ஒழுங்குபடுத்தலைச் செய்வதற்குமாக விளையாட்டு இணைப்பாளர் ஒருவர் விளையாட்டுத்துறைப் பொறுப்பாளரின் கீழ் இயங்குவார். விளையாட்டுப் பொறுப்பாளர் தேசிய கோட்பாடுகளிற்கு இணங்க விளையாட்டுத்துறையின் இயக்குனர்களாக இருப்பார்.
விளையாட்டுத்துறையின் நிர்வாகக் கட்டமைப்பு
முழுமையான .. கீலே அழுத்தவும்….PFD FILE