இது தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதலாவது வானொலியாகும். 11.12.1983 ம் ஆண்டு இந்த வானொலி சிற்றலை வரிசையில் தனது முதலாவது ஒலிபரப்பை இந்தியாவின் தஞ்சை மாவட்டத்திலுள்ள இரகசிய இடமொன்றில் இருந்து ஆரம்பித்தது. தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தால் ஆரம்பிக்கப்பட்ட இந்த வானொலி தனிப்பட்ட ஒரு இயக்க வானொலியாக அல்லாமல் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு பொதுவான வானொலியாக தன்னை பிரகடப்படுத்திக் கொண்டது இதன் சிறப்பம்சமாகும். முதலில் தமிழில் தனது ஒலிபரப்பை ஆரம்பித்த இந்த வானொலி பின்னர் ஆங்கிலம் சிங்களம் ஆகிய மொழிகளிலும் அதை விரிவாக்கிக் கொண்டது.
இலங்கை இராணுவப் படையினருக்காகவும், சிங்கள மக்களுக்காகவும் புலிகளின் குரலின் சிங்கள சேவையும் “தேதுன்ன” என்ற பெயரில் பின்னர் தொடங்கப் பெற்றது.