திருநெல்வேலி யாழ் மாவட்டத்தின் நல்லூர் பிரதேச செயலகப் பிரிவினுள் உள்ளடங்கும் பகுதியாகும். யாழ் நகரப் பகுதியிலிருந்து பலாலி வீதியூடாக வடக்குப் புறமாக ஏறக்குறைய மூன்று மைல் தூரத்தில் உள்ளது. இப் பிரதேசத்தில் யாழ். பல்கலைக்கழகம் மற்றும் யாழ் உயர் தொழில்நுட்பக் கல்லூரி போன்ற உயர் கல்வி நிறுவனங்களும், அரச அலுவலகங்களும் அமைந்துள்ளன.
1983ஆம் ஆண்டு யூலை மாதம் இருபத்துமூன்றாம் திகதி இரவு 11:45 மணியளவில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினரின் வாகனம் பலாலி வீதியில், பரமேசுவராச் சந்திக்கும் திருநெல்வேலிச் சந்திக்கும் இடையில் தபாற்பெட்டிச் திருநெல்வேலிப் பகுதி, பலாலி வீதி, சிவன் அம்மன் கிராமங்களைச் சேர்ந்த மக்களின் வீடுகளுக்குச் சென்ற இராணுவத்தினர் இப்பகுதியைச் சேர்ந்த ஐம்பத்தொன்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களைச் சுட்டுக் கொன்றனர். பல வீடுகள் தீயிட்டுக் கொழுத்தப்பட்டன.
24,25.07.1983 அன்று திருநெல்வேலிப் படுகொலைச் சம்பவத்தில் கொல்லப்பட்டோர் விபரம்:
குறிப்பு:- இச்சம்பவத்தில் பாதிப்படைந்த அனைவரது பெயர் விபரங்களையும் பெறமுடியவில்லை.
மூலம்: தமிழினப் படுகொலைகள் 1956 – 2001 நூல்.