தாம் வாழும் இடத்திற்கு ஏற்ப நிலத்தைக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனப் பகுத்த தமிழர் அவ்வப்பகுதியில் கிடைக்கும்மூலப்பொருள்களைக் கொண்டே தமது வாழிடங்களை அமைத்துக் கொண்டமையைச் சங்க இலக்கியம் நமக்குக் காட்டுகிறது. இலக்கியத்தில் தமிழர் கட்டிடக்கலை வீடுகள் அமைப்பதில் சில முறைகள் அக்காலத்தில் இருந்தன என்று குறிப்பிடுகிறார் டாக்டர் உ. வே. சாமிநாதையர். நெடுநல்வாடையில்: “பெரும் பெயர்மன்னர்க் கொப்ப மனைவகுத்து” என்பதனால் அவரவர்களுக்கேற்றபடி மனைகள் அமைக்கும் வழக்கம் இருந்ததென்பதை அறியலாம். வீடுகள்கட்டுவதற்கு கடைக்கால் (அத்திவாரம்) போடும் காலம் நெடுநல்வாடையில் காணப்படுகிறது. கோபுரங்களும், வாயின் மாடங்களும், நிலா முற்றங்களும், அறைகளும் அமைக்கப்பட்டன. வீடுகளின் நிலைகளிற் சித்திர வேலைகள் செய்யப்பட்டிருந்தன. மாடங்களாகவே சில வீடுகள் கட்டப்பட்டிருந்தன. காற்று ஓட்டத்திற்காக வீட்டின் சுவர்களிற் பலவகைச் சாளரங்கள் வைப்பதுண்டு. இவை காலதர் என்று கூறப்படும். இன்று நகரப் பகுதிகளில் அமைக்கப்பட்டிருப்பது போன்ற ‘பாதாளச் சாக்கடை’முறைமை பழந்தமிழ்ச் சமூகத்தில் இருந்தது என்பதனை இலக்கியப்பதிவுகள் உணர்த்துகின்றன. நீர் மறைவாகச் செல்லும் இம்மாதிரியான அமைப்பு வீடுகளில் இருந்தமையைப் பரிபாடல் காட்டுகின்றது. கல்லால் அடைக்கப்பட்ட இவ்வழிகள் இருந்தமையை ‘பாருடைத்த குண்டகழி’ […]...
Read More