சார்ல்ஸ் அன்ரனி படையணி
சார்ல்ஸ் அன்ரனி படையணி 10 ஏப்ரல் 1991 அன்று த.வி.புலிகளினால் முதலாவது சிறப்பு மரபுவழிச் சண்டை படையணியாக உருவாக்கப்பட்டது. இது தொடர்ந்து பிரதான சண்டைப் பிரிவாக விடுதலைப் புலிகளில் இருந்து, பிரதான சண்டைகளான ஜெயசிக்குறு நடவடிக்கை, 1996 முல்லைத்தீவுச் சமர், கிளிநொச்சிப் போர் (2008-2009), ஆனையிறவுப் படைத்தளத் தாக்குதல் (2000), ஓயாத அலைகள் நடவடிக்கை 1, 2, 3, 4 ஆகியவற்றில் பங்கு பற்றியது. விடுதலைப் புலிகளின் ஆரம்ப காலத்தில் விடுதலைப் புலிகளின் தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வலது கரமாக விளங்கிய சீலன் என அழைக்கப்பட்ட சார்ல்ஸ் லூக்காஸ் அன்ரனி என்பவரின் பெயர் இப்படையணிக்கு பால்ராஜ், அமுதாப், கோபித் போன்றோர் இப்படையணிக்குத் தலைமை தாங்கிய தளபதிகள் ஆவர். ஈழப்போரின் கடைசி நாட்களில் இப்படையணி முற்றாக அழிக்கப்பட்டது.
அதோ அந்த பறவை போல – லெப்.சீலன்