சேரன் ஈரூடக தாக்குதலணி நீர் நிலையிலும் தரையிலும் தாக்குதல் நடத்ததுவதற்காக உருவாக்கப்பட்டது. கடலிலும் தரையிலும் தாக்குதல் வலுக்கொண்ட படையணியை சேரன் ஈரூடக தாக்குதலணி எனலாம். பொதுவாக வேக கடல்வழித் தரையிறக்கத்துக்குப் பிறகு தரையில் தாக்குதல் நடத்தும் படையணியை ஈருடகப் படையணி குறிக்கும்.
கடலிலும் தரையிலும் தாக்குதல் வலுக்கொண்ட கடற்புலிகளோடு இணைந்து செயலாற்றும் அல்லது கடற்புலிகளின் ஒரு அங்கமாக இருக்கும் சேரன் ஈரூடக தாக்குதலணி ஒன்றை தமிழீழ விடுதலைப் கபுலிகள் 2006 ஆம் ஆண்டு கட்டமைத்துள்ளார்கள். இவர்களின் முதல் தாக்குதல் மண்டைதீவு படைத் தளத்தின் மீதும், இரண்டாவது தாக்குதல் நெடுந்தீவு கடற்படைத் தளத்தின் மீதும் நடத்தப்பட்டது.இந்த ஈரூடகப் படையின் பெயர் சேரன் ஈரூடகப் தாக்குதலணி என்பதாகும்.